கொள்கை & நோக்கம்

கொள்கை: (Vision)

AAMF-ன் கொள்கை: விளக்கும் வாசகம்: "ஒன்றுகூடி வளம் பொறுவோம்!"
அதிரை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வழுபடுத்த வேண்டிய காரியங்களை திட்டமிட்டு உறுதியுடன் செயலாற்றுவதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)-ன் அடிப்படை கொள்கையாகும்.

குறிப்பு:
நமதூர் மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிற வகையில் AAMF-ன் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரியங்கள் வருமாறு:

1. முஸ்லிம்களிடையே பொதுவாக கருத்து வேறுபாடுகள் உள்ள மார்க்க காரியங்களில் AAMF-ன் சார்பாகவோ, நடத்தும் நிகழ்ச்சிகளில் பேசவோ, விவாதிக்கவோ கூடாது, அவசியம் ஏற்பட்டால் அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொண்ட கருத்து வேறுபாடு இல்லாத பொதுவான காரிங்களை மட்டும் கவனமாக செயல்படுத்தலாம்.


2. நமதூர் முஸ்லிம் சகோதரர்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் எவரேனும் தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்பை மிகைப்படுத்தியும் மற்றவர்கள் சார்ந்திருக்கின்ற அனைப்புகளை பற்றிய குறைகளை கூறிக் கொள்ளும் வகையில் நமது AAMF-ன் நிகழ்ச்சிகளில் பேசவோ விவாதிக்கவோ கூடாது.

நோக்கம்: (Objective)

1. அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரை வாசிகளின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும்.


2. அதிரை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், கண்ணியம், இறையச்சம், மார்க்க சிந்தனை மேன்மை பெறவும், கல்வி, பொருளாதாரம், மருத்துவதம், சுகாதாரம், சமூக அரசியல் நலன், ஒழுக்க மாண்புகள், கட்டுபாடுகள் ஆகிய அனைத்து துறைகளும் மேம்பட தேவையான திட்டங்கள் வகுத்து செயல்படுத்த பாடுபடுவதும்.


3. அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும், ஒற்றுமையை வலியுறுத்தியும், மனித நேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும், தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கங்களாகும்.


0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes