Saturday, June 9, 2012

Thursday, June 7, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் !இன்று ( 08-06-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF'ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் A. அப்துல் முனாப், சமூக ஆர்வலர் சகோ.K.S. அப்துல் ரஹ்மான் ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக......
1.       கிராஅத் :A. முஹம்மது இப்ராகிம் ஆலிம்
2.       வரவேற்புரை : பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர்

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக.........
3.       சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எழுதிய "விழிப்புணர்வு பக்கங்கள்" என்ற புத்தகம் வெளியீடப்பட்டது.

4.       "அதிரை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் சார்பாக நமதூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் நமதூரைச் சேர்ந்த சிறந்த கல்வி நிலையங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

5.       அதிரையில் உள்ள ஒன்பது முஹல்லாக்களில் ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் அருகிலுள்ள ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A.லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிரை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு இலகுவாக அதிரை பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் மாவட்ட கலக்டர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று அனைத்து முஹல்லாவின் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6.       AAMF பைலாவின் இறுதிவடிவம் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துகள் / ஆலோசனைகள் எதிர்பார்க்கப்பட்டன.

7.       லண்டன் வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரத்தை ஏழை மாணவ மாணவியரின் சீருடைக்காக பயன்படுத்த வேண்டி அதிரை பைத்துல்மால் தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

8.      துபை வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஒருசில உறுப்பினா்களால் வசூல் செய்யப்பட்ட கலிஃபா உமர் (ரலி) மஸ்ஜீத் ( சுரைக்கா கொல்லை ) கட்டிட நிதியாக ரூபாய் ஐம்பது ஆயிரம் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
9.       சிறப்பு விருந்தினர்களாக காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், பெரிய ஜும்மாப் பள்ளி நிர்வாகிகள் சகோ. V.M. அப்துல் மஜீத், சகோ. K.S.M. பகுருதீன்,கீழத்தெரு ஜமாத் தலைவர் சகோ. தாஜுதீன், தரகர் தெரு ஜமாத் நிர்வாகி சகோ. அஹமது ஹாஜா, "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ், "கவிஞர்" சபீர், அதிரை நிருபர் – நெறியாளர்,சகோ. நெய்னா தம்பி, அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகி சகோ. ஜஃபருல்லா, ஆகியோர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

10.   நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "நெசவுத்தெரு முஹல்லாவில்" வருகின்ற 13-07-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes