Friday, December 30, 2011

முத்துப்பேட்டை குத்பா பள்ளி திறப்புவிழா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

முத்துப்பேட்டையின் 400 வருடகால பாரம்பரியமிக்க குத்பா பள்ளி புதுப்பிக்கப்பட்டு 30.12.2011 வெள்ளிக்கிழமையன்று திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் கண்ணியமிக்க ஆலிம் பெருமக்கள்அனைத்து ஊர் ஜமாஅத் பெரியவர்கள், மற்றும் சமுதாய சகோதர-சகோதரிகள் அனைவரையும் வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
அதிராம்பட்டிணம்.

Wednesday, December 21, 2011

Tuesday, December 13, 2011

தீ விபத்தில் சேதமடைந்த குடும்பகளுக்கு அதிரை லண்டன் வாழ் மக்களின் உதவி...

அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் கடந்த 10/11/2011 அன்று மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு, முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நெசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் தீக்கிரையானது. வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு லண்டன் வாழ் அதிரை மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி (AAMF) சார்பாக பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லம் முன்னிலையில் ரூ.30,000 தொகையை கீழத்தெரு முஹல்லா கமிட்டி பொறுப்பாளர்களிடம் 11.12.2011 அன்று ஒப்படைக்கப்பட்டது.

Friday, December 9, 2011

Monday, December 5, 2011

அமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது. 


இவ்வாலோசனை  அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக    துவங்கப்பட்டதே   தவிர, எந்த  ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது  அல்ல  என்பதாக   நிர்வாகிகள்  உறுதியாக   கருத்து பதிந்தார்கள். அத்துடன்    நமதூரில்   இயங்கி   வருகிற  எந்த  அமைப்புகளின்  செயல்பாடுகளுக்கு   போட்டியாகவோ   அல்லது  குறுக்கீடு  செய்வதற்காகவோ   AAMF துவங்கப்பட்டது இல்லை  என்று  ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு:

AAMFகுறித்து விளக்கம் பெற விரும்புகிறவா்கள் தயவு செய்து adiraiallmuhallah@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 050-7480023 / 055-4011344 என்கிற மொபையில் எண்களின் மூலமோ தொடா்புக் கொண்டு பெற்றுக் கொள்ளவும். கண்டிப்பாக முறையான முகவரியின்றி கேட்கப்படும் விளக்கங்களுக்கு எவ்வித பதில்களும் தெரியப்படுத்தப் படமாட்டாது என்பதை  தெரிவித்துக்  கொள்கிறோம்.

அன்புடன்,
AAMF நிர்வாகம்,
அமீரகம்.

Wednesday, November 30, 2011

லண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பா்களுக்கு ஒர் வேண்டுகோள்…


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அமீரகம் மற்றும் அதிரை போன்று லண்டனிலும் “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)” அமைப்பதற்கான முயற்ச்சியில் நமதூர் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர், எனவே லண்டன் வாழ் அதிரை நண்பர்கள் அனைவரும் கீழ் காணும் சகோதரர்களை தொடர்பு கொண்டு இந்த நல்ல முயற்ச்சிற்க்கு தங்களின் முழூ ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:

சகோ. குத்தூஸ்           - 0044 740 405 2728 
சகோ. இம்தியாஸ்      - 0044 746 639 3312
சகோ. இத்ரிஸ்            - 0044 759 241 8177
சகோ. பாஸ்னியா       - 0044 796 766 6288
மின்னஞ்சல் (email)    : aamflondon@gmail.com

இப்படிக்கு
Adirai All Muhallah Forum (AAMF)
அமீரக கிளை (UAE)

Friday, November 25, 2011

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முக்கிய நிகழ்வுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

ஒரு சிறிய இடைவேலைக்கு பிறகு தங்களை பின் தொடரும் தகவல் தெரிவிக்கும் வகையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 30.09.2011 அன்று கிஸஸ் கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற அமீரக AAMF-ன் முதல் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்ஷாஅல்லாஹ் உயிரூடும் வகையில் வரக்கூடிய ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை பயன்படுத்துவது என அமீரக நிர்வாகிகள் தீர்மானித்தோம். மாஷாஅல்லாஹ்! அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை தாயத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி அமீரக AAMF-ன் நிர்வாகிகளான – தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் அதிரைக்கு பயணமானோம்.

அதன்படி கடந்த 05.11.2011 முதல் 06.11.2011 வரை முறையே நெசவு தெரு, தரகர் தெரு, கடல்கரைத் தெரு, மேலத் தெரு, நடுத்தெரு, புதுத் தெரு மற்றும் கீழத் தெரு என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளையும் அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து அமீரகத்தில் உருவாகியுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்திய நோக்கத்தினையும், அதுபோன்று அதிரை ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவதின் அவசியத்தையும் விளக்கினோம். அமீரகத்தில் அனைத்து முஹல்லா சகோதரர்களும் தந்த ஆதரவைப் போன்று, இல்லை இல்லை அதைவிட கூடுதலான ஆதரவை தருவோம், நீங்கள் செய்யும் இந்த முயற்சிகள் வெற்றியடை எங்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவோம் என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் உறுதியளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

அதுபோன்று கடந்த 07.11.2011 அன்று அமீரக AAMF-ன் சார்பாக அதிரை அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு 08.11.2011 அன்று நமதூர் ஜாவியாவில் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற இருப்பதை தெரிவித்து அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம். மாஷாஅல்லாஹ்! இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் எழுத்துவடிவில் தயாரிக்கப்பட்டிருந்த AAMF-ன் உருவாக்கத்தின் கொள்கை மற்றும் நோக்கங்களை விளக்கும் பிரசுரம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

துவக்கம்:

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) ஐக்கிய அரபு அமீரகம் வாழ் அதிரைவாசிகளால் 23.09.2011 அன்று துவங்கப்பட்டது.இங்கே வாசிப்பு வசதி கருதி, இயக்கத்தின் பெயர் பொரும்பாலும் AAMF என்றே குறிப்பிட்டப்டுளள்து. இதனை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு என்று வாசித்திதுக் கொள்ளவும்.AAMF-ன் நம்பிக்கை:

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (ஆலு இம்ரான் 3:132)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அன்னிஸா 4:59)கொள்கை:

AAMF-ன் கொள்கை: விளக்கும் வாசகம்: "ஒன்றுகூடி வளம் பொறுவோம்!"

அதிரை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வழுபடுத்த வேண்டிய காரியங்களை திட்டமிட்டு உறுதியுடன் செயலாற்றுவதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)-ன் அடிப்படை கொள்கையாகும்.குறிப்பு:

நமதூர் மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிற வகையில் AAMF-ன் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரியங்கள் வருமாறு:1. முஸ்லிம்களிடையே பொதுவாக கருத்து வேறுபாடுகள் உள்ள மார்க்க காரியங்களில் AAMF-ன் சார்பாகவோ, நடத்தும் நிகழ்ச்சிகளில் பேசவோ, விவாதிக்கவோ கூடாது, அவசியம் ஏற்பட்டால் அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொண்ட கருத்து வேறுபாடு இல்லாத பொதுவான காரிங்களை மட்டும் கவனமாக செயல்படுத்தலாம்.2. நமதூர் முஸ்லிம் சகோதரர்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் எவரேனும் தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்பை மிகைப்படுத்தியும் மற்றவர்கள் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை பற்றிய குறைகளை கூறிக் கொள்ளும் வகையில் நமது AAMF-ன் நிகழ்ச்சிகளில் பேசவோ விவாதிக்கவோ கூடாது.நோக்கம்:1. அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரை வாசிகளின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும்.2. அதிரை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், கண்ணியம், இறையச்சம், மார்க்க சிந்தனை மேன்மை பெறவும், கல்வி, பொருளாதாரம், மருத்துவதம், சுகாதாரம், சமூக அரசியல் நலன், ஒழுக்க மாண்புகள், கட்டுபாடுகள் ஆகிய அனைத்து துறைகளும் மேம்பட தேவையான திட்டங்கள் வகுத்து செயல்படுத்த பாடுபடுவதும்.3. அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும், ஒற்றுமையை வலியுறுத்தியும், மனித நேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும், தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கங்களாகும்.AAMF-ன் செயல் திட்டங்கள்:

நம்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீர்கள்! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (ஃபுஸ்ஸிலத் 41:34)


தீய எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்வது இயற்கை, எளிது. ஆனால், நல்லெண்ணம் படைத்தவர்கள் ஒன்று கூடுவது கடினம் என்ற கருத்து இப்பொழுதும் நிலவுகிறது. ஏனெனில், தீமை செய்வோர்களின் குறிக்கோள் அழிவு. அதை யார் செய்தாலும் சரி, அதனால் வரும் நன்மையோ தீமையோ யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்பதினால்தான். ஆனால், நல்லது செய்ய விரும்புவோர் சிலர் நற்பெயர் தமக்கே சேர வேண்டும் என்று நினைப்பதால் பொதுநலம் மீறி தன்னலம் செயல்படத் துவங்கி, அனைவரையும் இணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது. மக்கள் நலம்தான் முக்கியம், அதனால் வரும் நற்பெயர் யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்று தனித்தனியாகச் செயல்படும் பொதுத்தொண்டுக் குழுக்கள் இணைந்துவிட்டால், அச்சக்திக்கு மண்ணில் இணையே கிடையாது. நாம் மேற்கொண்டுள்ள இப்பயணம் அப்படி ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்கே பாடுபடும்.


நமதூருக்கு பொதுவாகவும், ஒவ்வொரு முஹல்லாவிலும் தனித்தனி துறைகளை உருக்கவாக்கி AAMF-ன் கொள்கை மற்றும் நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்றிட முயல்வது. அவை வருமாறு:


1. உலமாக்கள் சபை,


2. கல்வி வழிகாட்டல் மற்றும் சேவை மையம்,


3. நகர வளர்ச்சி மையம்,


4. இலவச சட்ட உதவி மையம்,


5. AAMF-ன் ஜகாத் இல்லம்,


6. ஊடக சபை,


7. சமுதாய இளைஞர் மன்றம்,


8. சமுதாய மகளிர் மன்றம்.


இன்ஷாஅல்லாஹ் இத்துறைகளின் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.


நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு சிறப்புடன் நடைபெற்றது. அதனை இங்கே காணொலியில் காணலாம்.


அக்கூட்டத்தின் முடிவில் வரும் 10.11.2011 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் நடைபெற இருக்கிற மறு ஆலோசனை அவர்வு ஜாவியாவில் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அக்கூட்டத்திற்கு வரும்போது ஒவ்வொரு முஹல்லா சங்க சார்பாக தலா மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்து, அவர்கள் மாத்திரம் வந்து கலந்து கொள்வது என தீர்மானித்து முதல் நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இனிதே முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

என்றும் அன்புடன்,

நிர்வாகம்,

AAMF அமீரகம்

Thursday, November 24, 2011

ஜனாப் S. இக்பால் அவா்களின் நல்லடக்கம்.......

நேற்று அபுதாயில் வஃபாத்தாகிய ஜனாப் S. இக்பால் அவா்களின் ஜனாஸா இன்று மாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Xpress) மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னா் தமுமுக ஆம்புலன்ஸ் முலம் அதிரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா நாளை (25/11/2011) காலை ஜாவியா முடிந்தவுடன் கடல்கரை தெரு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் தொடா்புக்கு : சகோ. சமிர் 056 - 1990378

Friday, November 11, 2011

AAMF - துபை கிளை -நிர்வாகிகள் காணொளி பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரையில் வியாழன் மாலை அதாவது 10-11-2011 அன்று அனைத்து அதிரை முஹல்லா நிர்வாகிகள் தேர்வு மிகச் சிறப்புடன் நடந்தது அல்ஹம்துலில்லாஹ். கடந்த நோன்புப் பெருநாள் தொழுக்குப்பின்னர் துபாய் ஈத்கா மைதானத்தில் நிகழ்ந்த சந்திப்பின் விதை இன்று அதிரையில் செடியா ஊன்றப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டு முயற்சியின் வெற்றியை எளிதாக்கி வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் நிலைக்கட்டுமாக !

அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளையின் செயலாளர் V.T.அஜ்மல் அவர்களும், தாஜுல் இஸ்லாம் சங்கம், துபாய் கிளையின் தலைவர் B.ஜமாலுதீன் அவர்களும் அதிரைநிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின் காணொளியினை இங்கே பதிகிறோம்.

ஒருங்கினைப்பு என்பதன் அர்த்தம் மெய்பிப்போம், அதனை நிலைத்திட நிமிர்ந்த நடை போடுவோம் இன்ஷா அல்லாஹ் !
 
 

Thursday, November 10, 2011

அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கூட்டம் ஜாவியாவில் இன்று கூடியது. ஒவ்வொரு சங்கத்திலிருந்து முன்று நபர்கள் தலா ஏழு முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தலைவர் : தாஜூல் இஸ்லாம் சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)
செயலாளர் : பேராசிரியர் அப்துல் காதர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்)
துணைத் தலைவர் : சாகுல் ஹமீது (கடற்கரை தெரு சங்கம்)
துணைச் செயலாளர் : முகம்மது முகைதின் (நெசவுத் தெரு சங்கம் )
துணைத் தலைவர் : (மிஸ்கின் பள்ளி முஹல்லா)
பொருளாளர் : பாரக்கத் அலி (தரகர் தெரு சங்கம்)
துணைப் பொருளாளர் : கிழத்தெரு சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)

Wednesday, November 9, 2011

Tuesday, November 8, 2011

அதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூட்டம்!

அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் நமதூர் ஜாவியாவில் நடைப்பெற்றது. அதிரையில் உள்ள ஏழு சங்க நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்கூட்டத்தை நடத்துவதற்காக துபையில் இருந்து அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் நிர்வாகிகள் வந்து ஏற்பாடு செய்தனர்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு வரும் வியாழக்கிழமை இந்த கூட்டம் நடைபெறும்.


இதன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்.!
Sunday, November 6, 2011

AAMF துபை ஹஜ் பெருநாள் சந்திப்புஅஸ்ஸலாமு அலைக்கும். இன்று (06-11-2011)  ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ்.

காலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை.இன்,அதிரை அனைத்து முஹல்லா,அதிரை ஃபேக்ட் மற்றும் அதிரை நிருபர் இணைய தளங்களின் சார்பில் புகைப்படம் மற்றுக் காணொளிகள் எடுக்கப்பட்டது.

அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டதாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அனைத்து முஹல்லா ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மேலத்தெரு,கீழத்தெரு, நெசவுத்தெரு,தரகர் தெரு,கடற்கரை தெரு,மிஸ்கீன் பள்ளி மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க துபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சகோ.சிராஜுதீன் மற்றும் அதிரை நிருபர் சார்பில் சகோ.தாஜுதீன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் அதிரையின் பிரபல வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
Wednesday, November 2, 2011

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011

அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)  

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

    اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேல்த் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளை AAMF(துபை) ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துல்லாஹ்!

இதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும், நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும், நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் என AAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMF முடிவு செய்துள்ளது.

இவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்!

குறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.

அன்புடன்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
துபை –  ஐக்கிய அரபு அமீரகம்.


Monday, October 31, 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய வேண்டுகோள்


*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் குறித்து தமிழ்நாடு தோ்தல் ஆனணயம் அறிவித்துள்ளதை அதிரைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவார் A. தமீம் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.!*

**
அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்குகிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு*
சென்னையில்:சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்:கடந்த பொதுத் தேர்தலின்போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர்.
பெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி
முதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம் என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க  8ம் தேதிக்கு பிறகு பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*என்ன படிவம் தேவை?*
வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம் எண் 6,
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு
சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இதை கவனத்தில் கொண்டு தாயகத்தில் இருக்கும் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்கள்,திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் உடனடியாக இதை செய்யத் தூண்டும் விதமாக அமீரகம் முழுவதிலும் இருக்கும் நமதூா் மக்களின் கவனத்திற்கும் இந்த தகவலை எத்தி வைக்கும் பணியை நமது அமீரக அனைத்து முஹல்லா கூட்டமைப்புயின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
*A. தமீம்*
தலைவர்,
அமீரக அனைத்து முஹல்லா கூட்டமைப்பு.

Monday, October 24, 2011

வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடலாமே.....!


சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.
அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

Friday, October 21, 2011

Wednesday, October 19, 2011

மனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.
ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.

இப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, பல்வேறு வைட்டமின்களடங்கிய மல்டிவைட்டமின் மாத்திரைகள், போலிக் அமிலம், வைட்டமின் பி 6, மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை தேவைக்கதிகமாக உட்கொள்ளும்போது ஆயுட்காலத்தை அதிக அளவில் குறைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவில் அதிகரித்துவரும் ஒரு ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவு நிபுணர் மருத்துவர் கவுசல்யாநாதன். அதாவது, மருத்துவரின் முறையான ஆலோசனை பெறாமல், தாங்களாகவே பல்வேறு வைட்டமின்களை மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் போக்கு இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்துவருவதாகவும், இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Saturday, October 15, 2011

அதிரை வாக்காளர்களுக்கு அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. இம்மடல் உங்கள்
அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக்கிறோம்.

இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில
முஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம்
சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி
வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல்
இருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில்
நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க
வலியுறுத்த உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
நிர்வாகிகள்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
ஐக்கிய அரபு அமீரகம்

Thursday, October 13, 2011

AAMF முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழன் (13-10-2011) பின்னேறம் இஷாத் தொழுகைக்கு பின்
சகோ. ஷாகுல் ஹமீது (தலைவர் AIMAN) அபு தாபி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து நிர்வாகிகளும் தவறமல் கலந்து கெள்ளுமாறு கேட்டுக்கெள்ளபடுகிறார்கள்

தொடர்புக்கு:
தலைவர் : 055-7600563

இப்படிக்கு
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
அமீரகம்

Wednesday, October 12, 2011

முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அனைத்து அமீரக வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்களுக்கு ஒர் வேண்டுகோள், வருடாந்திர சந்தா தெகையாக 120/- திர்ஹம்ஸ் (மாதம் 10 வீதம்) நிர்னயிக்க பட்டுள்ளது. எனவே அனைத்து ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உற்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் மேல் குறிப்பிட்ட தொகையை முழுவதுமாகவோ அல்லது இரு தவனையாகவோ செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கெள்கிறோம்.

தொடர்புக்கு:


பொருளாளர் : 055-3075692
துனைத்தலைவர் : 055-4011344

Email Id : adiraisis@hotmail.com

Wednesday, October 5, 2011

Thursday, September 29, 2011

இன்ஷா அல்லாஹ் துபையில் அதிரை அனைத்து
முஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் முதல்
பொதுக்குழு கூட்டம் இன்று இரவு 8:30 மணியளவில் (இந்தியா)
நேரலை ஒளிப்பரப்பப்படும் ...

Saturday, September 24, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் தேர்வு (அமீரக கிளை)

Part-1


Part-2                                                                     Part-3

Part-4


  

Friday, September 23, 2011

புதுப்பட்டிணத்தில் காவி பொறுக்கிகள் வெறியாட்டம்


நமதூரை அடுத்த புதுப்பட்டிணத்தில் காவி ரவுடிக் கும்பல் தங்கள் குலப்புத்தியை காட்டி வெறியாட்டம் ஆடியது. இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வெளியூர்களிலிருந்து இறக்கப்பட்ட காவி ஓநாய்கள் டிரான்ஸ்பர்மரை ஆஃப் செய்து விட்டு முஸ்லீம்களின் மீது திட்டமிடப்பட்ட பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் பள்ளிவாயில் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன் 2 முஸ்லீம்களின் குடிசை வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

முத்துப்பேட்டைக்கு அடுத்து மதுக்கூர், புதுப்பட்டிணம் என முஸ்லீம்கள் செரிந்தும், பிற மத மக்களுடன் நல்லுறவுடன் வாழும் ஊர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மிக சமீபத்தில், புதுப்பட்டிணத்தின் மீது நடத்தப்பட்ட 3 வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. 


புதுப்பட்டிணத்தில் முந்தய கலவரங்களை தூண்டியவன் முத்துப்பேட்டை கலவரகர்த்த கருப்பு என்பவன் என்பதும் கவனிக்கத்தக்கது.

வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் காவிக்கயவர்கள் வெறியாட்டம் முடிந்தவுடன் கடற்கரை வழியாக தப்பிச்செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். தற்போது போலீஸ் குவிக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் இருந்தாலும் முஸ்லீம்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 


நர மாமிசபட்சிணி மோடியின் தோழியின் ஆட்சியில் காவிக்கும்பல் மீண்டும் ஆட்டம் போடத்துவங்கியுள்ளது. யானை தான் தன் தலையில் தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்ளும் என்ற பழமொழியை நினைவுபடுத்துகின்றது.


குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவர்களின் கொட்டம் அடக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என ஆட்சியாளர்களை எச்சரிக்கின்றோம்.

விரிவான தகவல்கள் விரைவில்... இன்ஷா அல்லாஹ் 

Tuesday, September 20, 2011

Monday, September 19, 2011

Friday, September 16, 2011

யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு

அபுதாபி,செப்டம்பர் 16: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் -வெளிநாட்டவர்களுக்கு (15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
சார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
அபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
துபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது .

Thursday, September 15, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .


பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இப்படிக்கு
தலைவர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்

Tuesday, September 13, 2011

உள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. !


"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க? முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா? நானா? போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்."

”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா... அவங்க எதாவது பண்ணுவாங்க..”

"இப்போ நிறைய படித்த இளைஞர்கள் இருக்காக, அவங்களிடம் பொறுப்பை கொடுத்த என்னவாம்!, அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க வெளிநாட்டுக் கனவை தள்ளி வைப்பாங்களா! என்பதும் ஒரு கேள்விதான்".

”துடிப்பான இளைஞர்களே கிடையாதா..?”

”ஏன் கிடையாது, நிறைய இருக்காங்களே..! ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ண விடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...”

இப்படி பரவலான பேச்சுக்களுடன், அதிரைப்பட்டினத்தின் தேர்வுநிலை பேருராட்சிக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.

வழக்கம்போலவே வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராவுத்தர் ஆண்டாலும் ரஹ்மான் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை... என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், அதிரைவாசிகளான உங்களுடன், உருக்கமாக சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்!

தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்ததோ, அதைப்போல அதிரையின் பேருராட்சியின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.

அதற்காக அதிரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்... நம்மூர் கடற்கரையை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒரு பேருராட்சியின் எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத / செய்யத் தவறிய, கண்டிப்பாக செய்ய இயன்ற நிறைய நல்ல விசயங்களை இங்கே அலசுவோம் !

தமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அரசுக்கு அதிகமான வரிகட்டும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, மின்சாரத் தட்டுப்பாடு, சாலை விளக்குகள், போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..!

பாதாளச் சாக்கடைத் திட்டம், அகல ரயில் பாதை திட்டம் போன்றவை அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்..? தமிழகக் குப்பைகளை ஒன்று சேர அள்ளியெடுத்து வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பணபலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை அகற்றுவதற்கு முடியவில்லை என்பது வேடிக்கையாகவே இருக்கு !

அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன? செய்யப் போவதென்ன?

காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுவர்த்தியாக சுடர் விட்டு உருகி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு ”பணப்பறிப்பு” மட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்?

சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..?

வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது... அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்... இப்படி அரசு சம்பந்தப்பட்ட எந்த விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் மாற்றியதைத் தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..?

அவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் பேரூராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே..? பணம் தானே நிர்ணயிக்கிறது...! அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்..? ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...?

இதைப்பற்றி நமக்கென்ன கவலை? இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே? என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப் பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...!

இதற்குத் தீர்வே கிடையாதா? ஊரில் நல்லவர்களே இல்லையா..? என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியா வண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்Dஅ புரவலர்கள், நமக்கேன் வீண்வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள், அல்லது அமைப்புகள், தெருக்கள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவானா..? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.

இந்த நிலைமாற என்ன வழி...?

ஒற்றுமை ! என்ற நபிமொழியின் ஒற்றை வார்த்தையைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதே” இவை அனைத்திற்கும் தீர்வாகும்.

பல வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் துவக்கப்பட்ட ஐக்கிய கமிட்டியை மீண்டும் தூசு தட்டி, தலைமுழுவாட்டி, புதுடிரெஸ் போட்டு மீண்டும் செயல்படுத்தவேண்டும். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன்னரே நாம் தான் இப்படியான ஐக்கிய கமிட்டியை முதலில் அமைத்தோம் வழிகாட்டியாக, ஆனால் வலி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டது, வழியை மற்றவர்கள் நன்றாகவே கண்டு கொண்டார்கள். இது எந்த வகையில் சாத்தியம் என்போர் கீழே தரப்பட்டிருக்கு சுட்டியை தட்டிப் பாருங்கள் அவர்களும் நம்மவர்கள்தான் வேற்றார்கள் அல்ல. நன்மையை நாடி யார் நல்லதைச் சொன்னாலும் கேட்டுத்தான் உள்வாங்குவோமே!

நம் பூர்வகுடி உறவுகள் எடுத்த தீர்மானங்கள் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே, இருப்பினும் அல்லாஹ் நமக்கும் ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிவைத் தந்திருக்கிறான் அதனைக் கொண்டும் சிந்திப்போம்.

மேலும் பார்க்க : http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802

மாஷா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது, நம் பூர்வகுடிச் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது? இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை! நான் அவர்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் மொழிபெயர்ப்ப்பு மட்டுமே இந்த ஆக்கம்.

இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!

- அப்துல் மாலிக்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes