Monday, December 5, 2011

அமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது. 

இவ்வாலோசனை  அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக    துவங்கப்பட்டதே   தவிர, எந்த  ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது  அல்ல  என்பதாக   நிர்வாகிகள்  உறுதியாக   கருத்து பதிந்தார்கள். அத்துடன்    நமதூரில்   இயங்கி   வருகிற  எந்த  அமைப்புகளின்  செயல்பாடுகளுக்கு   போட்டியாகவோ   அல்லது  குறுக்கீடு  செய்வதற்காகவோ   AAMF துவங்கப்பட்டது இல்லை  என்று  ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு:

AAMFகுறித்து விளக்கம் பெற விரும்புகிறவா்கள் தயவு செய்து adiraiallmuhallah@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 050-7480023 / 055-4011344 என்கிற மொபையில் எண்களின் மூலமோ தொடா்புக் கொண்டு பெற்றுக் கொள்ளவும். கண்டிப்பாக முறையான முகவரியின்றி கேட்கப்படும் விளக்கங்களுக்கு எவ்வித பதில்களும் தெரியப்படுத்தப் படமாட்டாது என்பதை  தெரிவித்துக்  கொள்கிறோம்.

அன்புடன்,
AAMF நிர்வாகம்,
அமீரகம்.

2 comments:

Abdul Wahab said...

நான் AAMF-ன் நிலைபாட்டை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். மேலும் AAMF-ன் செயல் செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை விரைவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த கோரிக்கை வைக்கிறேன். AAMF-ன் செயல் திட்டத்தில் உள்ள ஊடகப்பிரிவில் நமதூர் சகோதரர்களால் நடத்தப்பட்டுவரும் அனைத்து இணைய வலைப்பூ இயக்குனர்களையும், நமதூரில் தினசரி இதழ்களில் நிருபர்களாக பணி செய்யக் கூடியவர்களையும் இணைத்து இயங்கக்கூடிய வகையில் ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதோடு அவர்களில் முழு முகவரியை தெரிவிக்காமல், புனைப் பெயர்களில் கருத்து, கட்டுரைகள் எழுதுபவர்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டுகோல் வைக்கிறேன். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும்> மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,6

ஆகவே AAMF-ன் ஊடக பிரிவில் செயல்பட கூடியவர்கள் அவர்களுடைய பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் தங்கள் செய்திகளை பதியக்கூடியவர்களாக இருக்க ஏற்பாடு செய்வது வீண் குழப்பங்கள், சந்தேகங்கள் தவிர்க்க உதவும் என நினைக்கிறேன்.

Regard’s
Abdul Wahab
Mobile No. 050-9303738

Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes