Sunday, December 29, 2013

AAMF-ன் டிசம்பர் மாத கூட்டம்

AAMF-ன் டிசம்பர் மாத கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்],

இடம் : து.தலைவர்.முஹம்மது இஸ்மாயில்.

தேதி: 27.12.2013, வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக  AAMF-ன்  டிசம்பர் மாத  செயற்குழு  கூட்டம் 

தலைவா்  A.தமீம்  அவா்கள்  தலைமையில்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் ஆலோசித்து 

1. கடந்த ஆண்டைப்போன்று, AAMF-ன் 2014-ம் ஆண்டுக்கான காலண்டர் விஷயமாக 

விவாதிக்கப்பட்டு அதனை அச்சடிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, இதனுடைய 

செலவுகளை அனைத்து மஹல்லாஹ் நிர்வாகிகள் பகிர்ந்து கொள்வது என்றும் 

முடிவு செய்யப்பட்டது.

2. இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதி அன்று, புதிய நிர்வாகிகளின் 

தேர்வு (ஒவ்வொரு மஹல்லா சார்பில் பறிந்துரைக்கப்பட்ட 3 நபர்களை கொண்டு) 

சகோ.இபுராஹீம் டேய்ரா இல்லத்தில் நடைபெரும்.

3. கூட்டத்திற்கு வராத பிற மஹல்லாஹ் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, அடுத்த 

கூட்டத்திற்கு கண்டிப்பாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது.
  

Tuesday, October 15, 2013

AAMF துபாய் ஈத்காவில் நடந்த ஹஜ் பெருநாள் தொழுகையில் அதிரையர்களின் சந்திப்பு (புகைப்படங்கள்)


அமீரகம் துபையில் இன்று 15/10/2013 செவ்வாய்க்கிழமை புனித தியாகத் திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.துபாய் நேரப்படி காலை 6.40 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாளைக்கான தொழுகை சிறப்புடன் நடந்தது. டேரா துபை ஈத்காவில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Friday, October 11, 2013

AAMF-இன் ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் அனைத்து முஹல்லா கூட்டமைப்புக்கு (AAMF) 
தொடங்கப்பட்டது முதல் துபாயில் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாளன்று அதிரைவாசிகளுக்கிடையே ஒற்றுமையையும்   சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் ஒன்று கூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம் (அல்ஹம்துலில்லாஹ்).


அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ் பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா (DEIRA EID MUSALLAH)  மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன் சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே (AL BARAHA சந்திப்பில்) அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு:
இத்தகைய சந்திப்புகள் மூலமே வெளிநாட்டிலுள்ள அதிரைவாசிகளுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராது கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை உறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.


இப்படிக்கு,
தலைவர்
A.Thameem Airlink

MobileNo :0097150-7480023
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு-AAMF
அமீரகம் (UAE).

Thursday, October 3, 2013

AAMF-ன் செப்டம்பர் 2013 மாத கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

 

இடம் : செயலாளர் V.T.அஜ்மல்கான் ரூம்.

தேதி: 27.09.2013

 

அமீரக AAMF-ன் செப்டம்பா் மாத செயற்குழு கூட்டம் தலைவா் A. தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமா்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீா்மானங்கள் :

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது, அதன்படி ஒவ்வொரு மஹல்லா சார்பில் 3 நபர் பறிந்துரைக்கப்பட்டு அதன்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது எனவும், அதுவரை பழைய நிர்வாகிகள் டிசம்பர் மாதம் ‘2013 இறுதி வரை நீடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இரவு நேர மருத்துவ சேவைப்பற்றி விவாதிக்கப்பட்டது, இதுகுறித்து சகோ.A.தமீம், ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு முயற்ச்சி மேற்கோள்வது என முடிவு சய்யப்பட்டது.

அடுத்த செயற்குழு கூட்டம் மிஸ்கீன் பள்ளி மஹல்லாவில் அக்டோபர் 25-ம் தேதி M.பசீர் அகமது இல்லத்தில் நடைபெறும். 

Thursday, August 8, 2013

AAMF 2013-ம் ஆண்டு - நோன்பு பெருநாள் சந்திப்பு துளிகள்…


2013-ம் ஆண்டு - நோன்பு பெருநாள் சந்திப்பு துளிகள்…
அல்லாஹ்வின் பேரருளால் 08-08-2013 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.காலை 06:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 6:40 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.
சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
அதிரை தவிர்த்து கீழக்கரை, காயல்பட்டினம், லெப்பைக் குடிக்காடு மற்றும் ஓரிரு ஊரைச்சார்ந்தவர்களும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அதிரைவாசிகள் 300 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அதிகாலை (துபை) வெயிலின் வெட்கையையும் பொருட்படுத்தாமல் வேட்கையுடன் வந்திருந்த அதிரைவாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அல்லாஹ்வின் கிருபையால் வெயிலின் தாக்கம் சிறிதும் இல்லாமல்  இருந்தது வருகைப்புரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
எங்களின் அன்பான அழைப்பை ஏற்று ஆர்வத்துடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றியும் துஆ-வும்.


இப்படிக்கு
நிர்வாகம்
அதிரை அனைத்து மஹல்லாஹ் கூட்டமைப்பு –AAMF
அமீரகம்

Tuesday, August 6, 2013

AAMF-இன் மூன்றாம் ஆண்டு நோன்பு பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்

AAMF-இன் மூன்றாம் ஆண்டு நோன்பு பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் அனைத்து முஹல்லா கூட்டமைப்புக்கு (AAMF) 
தொடங்கப்பட்டது முதல் துபாயில் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாளன்று அதிரைவாசிகளுக்கிடையே ஒற்றுமையையும்   சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம் (அல்ஹம்துலில்லாஹ்).


அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் நோன்பு பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(DEIRA EID MUSALLAH) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன் சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே (AL BARAHA சந்திப்பில்) அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்து கொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

இப்படிக்கு,

நிர்வாகம்
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு-AAMF
அமீரகம் (UAE).

Saturday, July 20, 2013

AAMF (துபாய்) மேற்பார்வையில் நோன்பு கஞ்சி வினியோகம்


ஈமான்(IMAN) அமைப்பின் வேண்டுகோளின்படி- AAMF (துபாய்) மேற்பார்வையில் நோன்பு கஞ்சி வினியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்அன்பிற்கினிய அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கும் அவர்தம்உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சங்கைமிகு ரமலான் மாதத்தின்அருட்கொடைகளை வல்லோன் அல்லாஹ் அருளட்டுமாக.ஆமீன்.அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த இருவருடங்களுக்கு முன்புஅமீரகத்திலும்அதிரையிலும் சிலபல திட்டங்களுடன் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம், மேலும் அமைப்பின் நோக்கத்தையும் இலக்கையும் நம் அனைவரின்தொடர்ச்சியான கூட்டுசெயல்பாடுகளால் விரைவில் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான வழிவகைகளை நமக்கு இலகுவாக்கி வைப்பானாகஆமீன்.


முஸ்லிம்கள் நிறைந்துள்ள தமிழக ஊர்களில் நமதூர் அதிராம்பட்டினம் குறித்தநல்லெண்ணம் பலரிடமும் உள்ளதை அறிந்திருப்பீர்கள்அவ்வகையில்ஐக்கியஅரபு அமீரகத்திலுள்ள ஈமான்(IMAN) அமைப்புஒவ்வொரு வருடமும் இப்தார்நோன்பு கஞ்சி மற்றும் பதார்த்தங்களை நோன்பாளிகளுக்கு துபையிலுள்ளபள்ளிகளில் விநியோகித்து வருகிறது.

அதன்படிஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF) உருவாக்கப்பட்டபிறகு கடந்த வருடம் டேரா வாழைமரத்தடி பள்ளியில்விநியோகிக்கும் பொறுப்பை AAMF-க்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நமதூர்தன்னார்வளர்கள் சிறப்பாக செய்து நோன்பாளிகளின் துஆவைப் பெற்றார்கள்.

அதுபோல்,இவ்வருடமும் டேரா-ப்ரிஜ்முரார் பகுதியிலுள்ள ஷேக்கா லத்தீஃபாமஸ்ஜிதில்” நோன்பு கஞ்சி விநியோகம் செய்யும் பொருப்பை AAMF-இடம் தந்து, நோன்பு பிறை 3-லிருந்து நமதூர் ஒரு சில மஹல்லாஹ்வாசிகளின் பங்களிப்பில் செய்து வருகிறோம்,
நோன்பாளிகளுக்கு நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கான நற்கூலிஅல்லாஹ்விடம் பலமடங்கு என்பதை சொல்லத்தேவையில்லைமேலும்நமதூர்இளைஞர்களின் சேவை மனப்பான்மைமீது நம்பிக்கை கொண்டும் AAMF- சார்ந்ததன்னார்வலர்கள் (மஹல்லாவிற்கு 1 நபர் வீதம்) தங்களையும் இணைத்துக்கொண்டுஅல்லாஹ்வின் அருளைப்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,தலைவர்
AAMF - 
துபாய் கிளை

Friday, March 8, 2013

அமீரக AAMF–ன் மார்ச் 2013 மாத செயற்குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: தலைவா் A.தமீம் ROOM
 தேதி: 07-03-2013

அமீரக AAMF–ன் மார்ச் 2013 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

அமர்வில் ஆலோசித்து எடுத்த தீர்மானங்கள்:
·         தரகர் தெரு மஹல்லாஹ் பிரச்சினை சம்பந்தமாக AAMF-ன் தலைமை நிர்வாகிகளுக்கு, பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்ச்சி எடுக்கவேண்டி கடிதம் எழுதுவது.

·         காலண்டர் பங்கீட்டு தொகையை, சென்ற கூட்டத்தில் முடிவு செய்தபடி இதுவரை செலுத்தாத மற்ற மஹல்லாக்கள் கூடிய விரைவில் செலுத்துவது.

·         அடுத்த செயற்குழு கூட்டம் 11.04.2013 அன்று செயலாளர் இல்லத்தில் நடத்துவது.

Tuesday, February 5, 2013

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.


(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes