பிஸ்மில்லாஹ்
ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
அல்லாஹ்வின் பேரருளால் அனைத்து முஹல்லா கூட்டமைப்புக்கு (AAMF) 
தொடங்கப்பட்டது முதல் துபாயில்
நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாளன்று அதிரைவாசிகளுக்கிடையே ஒற்றுமையையும்   சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் ஒன்று
கூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம் (அல்ஹம்துலில்லாஹ்).
அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ் பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா (DEIRA EID MUSALLAH)
 மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன் சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே (AL BARAHA சந்திப்பில்) அமீரகத்திலுள்ள
நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து
அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.
குறிப்பு: 
இத்தகைய சந்திப்புகள் மூலமே வெளிநாட்டிலுள்ள அதிரைவாசிகளுக்கிடையே
புரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராது கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை உறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.
இப்படிக்கு,
தலைவர்
A.Thameem Airlink 
MobileNo :0097150-7480023
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு-AAMF
அமீரகம் (UAE).
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு-AAMF
அமீரகம் (UAE).



 
 Abdul Wahab
Abdul Wahab
 
