'ஒன்று கூடி வளம் பொறுவோம் !' என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் சமூகத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாடுடன் கூடிய ஒழுங்கு முறைகளையும் உருவாக்கி சமூக நல்லிணக்கம், மனித நேயம், சகோதரத்துவம் போன்றவற்றை வளர்த்து அனைவரிடத்திலும் அமைதியான வாழ்கைக்கு வழியமைத்துக் கொடுத்து சமூக மேம்பாட்டிற்காக என்றென்றும் பாடுபடுவதற்காக உருவாக்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு இன்றைய நாளில் ஒரு வருடத்தையும் தாண்டி ஒற்றுமையோடு வெற்றிகரமாக நடந்து வருகின்றன [ அல்ஹம்துலில்லாஹ் ] எல்லாப்புகழும் இறைவனுக்கே !
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக கடந்த ஆண்டைப்போல இந்த வருடமும் அதிரையில் காலண்டர்கள் விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டு அதன்படி நமதூரைச் சார்ந்த அனைத்து ஜமாத்துகள், மஸ்ஜித்கள், மதரஸாக்கள், அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிருவனங்கள், இஸ்லாமிய பொது அமைப்புகள், கிராம பஞ்சாயத்துகள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் போன்றவற்றிற்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இக்காலண்டரில் அரசின் விடுமுறை தினங்கள், அவசரகால தொலைப்பேசிச் தொடர்புகள் குறிப்பாக அதிரை மற்றும் தஞ்சை மருத்துவமனைகளின் தொடர்புகள், AAMF'ன் நிர்வாகிகளின் அலைப்பேசி தொடர்புகள், இதற்கும் கூடுதலாக தினம் ஒரு ஹதிஸ் என ஒவ்வொரு நாளிதழிலும் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பாகக் கருதப்படுகிறது.



Adirai All Muhallah Forum

