Sunday, January 13, 2013

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டம் !
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]


கடந்த [ 11-01-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டத்திற்கு  AAMF’ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி, பெரிய ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் கமிட்டியின் நிர்வாகிகள் MMS. தாஜுதீன், VM. அப்துல் மஜீது, KSM. பகுருதீன், PMK. தாஜுதீன் ஆகியருடன் முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  ஜமீல் M. ஸாலிஹ், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அக்பர் ஹாஜியார் மற்றும் KSA. அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.

ஆண்டறிக்கையின் சிறப்பு அம்சங்கள் :
 
1) 18 பக்கங்களைக் கொண்ட AAMF’ன் ஆண்டறிக்கையை வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு விருந்தினர்களாக கூட்டத்தில் கலந்துகொண்ட பலரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 


2) AAMF’ன் சார்பாக இதுவரையில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், அவசரக் கூட்டங்கள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டவை மற்றும் செயல்படுத்தப்படக் கூடியவை ஆகியன தொடர்பாக உள்ள தகவல்கள் இடம்பெற்றன. 

3) மேலும் AAMF’ன் சார்பாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், நிதி உதவிகள் ஆகியன தொடர்பான தகவல்களும் இடம்பெற்றன.

4) இந்தக் கூட்டத்தில் முதன் முறையாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி அவர்கள் தனது சிறப்புரையில் “மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் ஊர் பொதுமக்களின் பங்களிப்புகள் என்ன ? என்பது பற்றியும் மேலும் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுடன் அவர்களின் ஒத்துழைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?” என்பது குறித்தும் பேசினார்.

5)‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது அவர்களின் மேற்பார்வையுடன், சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் பங்களிப்புடன், ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ் அவர்களால் தயாரிக்கப்பட்ட AAMF’ன் திருத்தத்திற்குரிய சட்ட வரைவு அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அழித்தல் / திருத்துதல் / சேர்த்தல் ஆகியன இருந்தால், அவற்றை ஒரு வார கால அவகாசத்திற்குள் தெரியப்படுத்த அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

6) அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அமீரக கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட AAMF’ன் 2013 ஆம் ஆண்டிற்கான காலண்டர்கள் இலவசமாக விநியோகிகப்பட்டது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டன.
 7) AAMF’ன் சார்பாக இனிவரும் கூட்டங்களை நமதூர் ஜாவியா பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு மஹல்லா சார்பாக நடத்தப்பட வேண்டும்’ என்று AAMF’ன் துணைச்செயலாளர் A. முஹம்மது முகைதீன் அவர்களால் வைக்கப்பட்ட வேண்டுகோளை எடுத்துக்கொண்டு விவாதம் செய்யப்பட்டன. இறுதியில் AAMF’ன் சார்பாக நடைபெற உள்ள சிறப்பு மற்றும் அவசரக்கூட்டங்களை ஜாவியா பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்றும், இதற்காக AAMF’ன் சார்பாக ஜாவியா நிர்வாகத்தினரை முறையாக அணுகி அனுமதி கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.8. AAMF’ன் வரவு-செலவு கணக்கு விவரங்கள் அனைத்தும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

9. AAMF’க்கு செலுத்த வேண்டிய மஹல்லா ஆண்டுச் சந்தா ரூபாய் 1000/- மற்றும் உறுப்பினர்களின் ஆண்டுச்சந்தா ரூபாய் 100/- ஆகிய தொகைகளை AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் செலுத்தும்படி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
 


10. கூட்டத்தின் நிகழ்ச்சிகள் மஹரீப் தொழுகைக்கு பின்பும் தொடர்ந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

11. நன்றியுரை : சகோ. B. ஜமாலுதீன் அவர்கள்.

12. AAMF’ன் முதல் ஆண்டு வெற்றிகரமாக முடிவுற்று, AAMF’ன் இரண்டாம் ஆண்டின் துவக்கக் கூட்டதை தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பாக அதன் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்துருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :
 
‘கிராம பஞ்சாயத்தார்களோடு சந்திப்பது தொடர்பாக’ தேதி மற்றும் இடம் முடிவு செய்வது குறித்து போதிய கால அவகாசம் இல்லாததால் இக்கூட்டதில் அவற்றை எடுத்துக்கொண்டு பேச இயலவில்லை. இதற்காக வருகின்ற 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4. 30 மணியளவில் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவன் நாடினால் ! விரைவில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர் - AAMF
அதிரை

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes