Thursday, February 2, 2012

(AAMF) லண்டன் முதல் ஆலோசனை கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) லண்டனில் ஏற்படுத்தப்பட்டபின் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டம் 29-01-2012 அன்று சகோ.இம்தியாஸ் இல்லத்தில் (Croydon) நடைபெற்றது, அதன் கலந்துரையாடலின் காணொலியை கீழே காணவும்………






Saturday, January 28, 2012

அதிராம்பட்டினம் பேரூராட்சி பொது மக்களுக்கு ஒர் அறிவிப்பு


அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தங்களால் செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி, உரிமக்கட்டணம் மற்றும் குடி நீர் கட்டணங்களை 31 -03 -2012 க்குள் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரதி வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் பேரூராட்சி வசூல் பணியாளர்கள் தங்கள் கீழ் கண்ட ஜும்மா பள்ளி வாசல்களுக்கு அருகாமையில் வருகை தர உள்ளனர். இப்பேரூராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1.  1) கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல்
  2.  2) தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசல்
  3.  3) பெரிய ஜும்மா பள்ளிவாசல் 
  4.  4) முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்-ஆலடித்தெரு
  5.  5) ஈ.சி.ஆர்.தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசல்

  6.  இப்படிக்கு
  7. செயலர் அலுவலர்,
  8. அதிராம்பட்டினம் பேரூராட்சி



நன்றி
அதிரை.இன்

Wednesday, January 25, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – பொது அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012  )  அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில்,

நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்ட இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ஆலோசனைகளுக்குப்பின் சகோதரர்கள் முஹம்மது அன்சர், முஹம்மது அப்சர் மற்றும் முஹம்மது மக்சூத் ஆகியோர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு தற்சமயம் நமது தக்வா பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்பு கொள்ள இலகுவாக நமதூரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் அறிவிப்பு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )இவர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் :முஹம்மது அன்சர் : 7418808648,  9750197162
இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )
அதிராம்பட்டினம்

Wednesday, January 18, 2012

லண்டன் AAMF ஒருங்கினைப்பாளர்க்ளுக்கு வாழ்த்துக்கள்.....

லண்டன் வாழ் அனைத்து அதிரை நல் உள்ளங்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
நமது ஊர் அன்பு சகோதரர்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்ற நல் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF ) லண்டனிலும் அமைய முழு ஒத்துழைப்பு நல்கிய சகோ.இம்தியாஸ் மற்றும் அனைத்து சகோதர்களுககும் எங்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் AAMF அமீரக கிளை சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
 ADIRAI ALL MUHALLAH FORUM (AAMF)
 அமீரக தலைவர் மற்றும் நிர்வாகிகள்

Monday, January 16, 2012

லண்டன் AAMF-ன் நிர்வாகிகள் தேர்வு:

                                        பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
                       பிற நாடுகளில் வாழும் நம் அதிரை சகோதரர்களும்
                                             ஒருகிணைக்கப்பட வேண்டும் !

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு, 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அமீரகத்திலும், அதிரையிலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதின் செய்தியினையும், அதன் துவக்கப்பட்டதின் நோக்கங்களையும் அவசியத்தினையும் லண்டன் வாழ் சகோதரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 160 மேல் நமதூர் சகோதரர்கள் லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருகிணைக்கப்பட்டு கீழ்காணும் சகோதரர்களை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்துள்ளார்கள். அவை வருமாறு:
1. தலைவர்:               சகோ. ரஜீஸ் கான்       கடல்கரைத் தெரு     0044-7779290008
2. து. தலைவர்:          சகோ. நஜீர்                      கீழத் தெரு               0044-7405726297
3. செயலாளர்:           சகோ. K.இத்ரீஸ்           புதுமனைத் தெரு 0044-7592418177 . 4. து. செயலாளர்:      சகோ. இப்ராஹீம்         புதுத் தெரு    
5. து. செயலாளர்:      சகோ. சபுர் கான்           தரகர் தெரு   
6. பொருளாளர்:        சகோ. ஜமால் முஹம்மது      மேலத் தெரு 0044-7522062767
7. து. பொருளாளர்:   சகோ. முஹம்மது இலியாஸ் நெசவு தெரு 0044-7872051340
நம் லண்டன் வாழ் சகோதரர்கள் அனவைரும் எல்லா வகையிலும் ஒருமனதாக இணைந்து மேலே தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
                                                                   தகவல்:
                                                                நிர்வாகம்
                                                           AAMF – அமீரகம்

Saturday, January 14, 2012

AAMF 'ன் அவசரக்கூட்டம் !


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக இன்று ( 14-01-2012  )  அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசர இக்கூட்டத்தில்,
நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  (AAMF சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF )நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துவாவுடன் நிறைவு பெற்றது.
இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
அதிராம்பட்டிணம்.

Sunday, January 1, 2012

Friday, December 30, 2011

முத்துப்பேட்டை குத்பா பள்ளி திறப்புவிழா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

முத்துப்பேட்டையின் 400 வருடகால பாரம்பரியமிக்க குத்பா பள்ளி புதுப்பிக்கப்பட்டு 30.12.2011 வெள்ளிக்கிழமையன்று திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் கண்ணியமிக்க ஆலிம் பெருமக்கள்அனைத்து ஊர் ஜமாஅத் பெரியவர்கள், மற்றும் சமுதாய சகோதர-சகோதரிகள் அனைவரையும் வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
அதிராம்பட்டிணம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes