Saturday, June 9, 2012

Thursday, June 7, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் !



இன்று ( 08-06-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF'ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் A. அப்துல் முனாப், சமூக ஆர்வலர் சகோ.K.S. அப்துல் ரஹ்மான் ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக......
1.       கிராஅத் :A. முஹம்மது இப்ராகிம் ஆலிம்
2.       வரவேற்புரை : பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர்

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக.........
3.       சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எழுதிய "விழிப்புணர்வு பக்கங்கள்" என்ற புத்தகம் வெளியீடப்பட்டது.

4.       "அதிரை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் சார்பாக நமதூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் நமதூரைச் சேர்ந்த சிறந்த கல்வி நிலையங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

5.       அதிரையில் உள்ள ஒன்பது முஹல்லாக்களில் ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் அருகிலுள்ள ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A.லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிரை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு இலகுவாக அதிரை பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் மாவட்ட கலக்டர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று அனைத்து முஹல்லாவின் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6.       AAMF பைலாவின் இறுதிவடிவம் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துகள் / ஆலோசனைகள் எதிர்பார்க்கப்பட்டன.

7.       லண்டன் வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரத்தை ஏழை மாணவ மாணவியரின் சீருடைக்காக பயன்படுத்த வேண்டி அதிரை பைத்துல்மால் தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

8.      துபை வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஒருசில உறுப்பினா்களால் வசூல் செய்யப்பட்ட கலிஃபா உமர் (ரலி) மஸ்ஜீத் ( சுரைக்கா கொல்லை ) கட்டிட நிதியாக ரூபாய் ஐம்பது ஆயிரம் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
9.       சிறப்பு விருந்தினர்களாக காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், பெரிய ஜும்மாப் பள்ளி நிர்வாகிகள் சகோ. V.M. அப்துல் மஜீத், சகோ. K.S.M. பகுருதீன்,கீழத்தெரு ஜமாத் தலைவர் சகோ. தாஜுதீன், தரகர் தெரு ஜமாத் நிர்வாகி சகோ. அஹமது ஹாஜா, "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ், "கவிஞர்" சபீர், அதிரை நிருபர் – நெறியாளர்,சகோ. நெய்னா தம்பி, அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகி சகோ. ஜஃபருல்லா, ஆகியோர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

10.   நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "நெசவுத்தெரு முஹல்லாவில்" வருகின்ற 13-07-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Friday, May 11, 2012

அமீராக AAMF-யின் செயற்குழு கூட்டம்


நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:


1)  1)கீழத்தெரு முஹல்லாவாசிகள் கொடுத்த கடிதத்திற்கு AAMF–ன் சார்பாக விளக்கமளிக்ப்பட்டது.
2)   2)AMF–ன் அமைப்பு நிர்ணயச் சட்டம் அனைவருக்கு படித்துக் காட்டப்பட்டு, இறுதி செய்யப்பட்டது. இதன் நகல் தாயக AAMF-ற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
3)   3)அமீரகத்தில் AAMF-ல் உள்ள பலவீனமான முஹல்லாக்களை நோ்முகமாக சந்தித்து ஆா்வப்படுத்துவது என தீா்மானக்கப்பட்டது.


     4)   வருகிற ஜீன் மாத செயற்குழு கூட்டம் 14-06-2012 அன்று இன்ஷா அல்லாஹ் துணைத் தலைவா் P.இஸ்மாயில் காக்கா இல்லாத்தில் நடைபெறும்.

Monday, May 7, 2012

AAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு​ப் புதிய நிர்வாகக் கமிட்டி !



AAMF’ன் அவசரக் கூட்டத்தில்
அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 04-05-2012 ) அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவில் நடந்த ஐந்தாவது கூட்டத்தில், அல் அமீன் பள்ளி சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்துப் பேசுவது என்ற தீர்மானத்தை எடுத்து, இன்று அஸர் தொழுகைக்குப் பின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக, ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் தலா இருவர் வீதமும், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இரண்டு நபர்களும், நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் ஆகக் கூடுதல் இருபத்திமூன்று நபர்களைக் கொண்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி என்ற பெயரில் உருவாக்கி, அல்லாஹ்வின் பள்ளியைக் கட்டி எழுப்புவது என்றும், அதன்படிக் கீழ்க்கண்ட புதிய நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது:


தலைவர் : மெளலவி முஹம்மது இப்ராகிம் ஆலிம்
துணைத் தலைவர் : M.M.S. சேக் நசுருதீன்
துணைத் தலைவர் : S.M.A. அக்பர் ஹாஜியார்,
செயலாளர் : S.K.M.அஹமது அன்சாரி
துணைச் செயலாளர் : A. நெய்னா முஹம்மது ( மான் )
துணைச் செயலாளர் : S. அஹமது ஹாஜா
பொருளாளர் : M.S. ஷிஹாபுதீன்

செயற்குழு உறுப்பினர்கள்:
M. நிஜாமுதீன்
P.M.K. தாஜுதீன்
M.I. முஹம்மது பாக்கர்
S. S. சேக்தாவுது
M.A. அஹமது ஹாஜா
J. சாகுல் ஹமீத்
K.M. பரக்கத் அலி
K. யாஹியா கான்
S.M.A. அஹமது கபீர்
S. அஹமது ஜலீல்
E. வாப்பு மரைக்காயர்
A. முஹம்மது மொய்தீன்
N.M. ஜபருல்லா
I. இஷாக்
மர்ஜூக்
S. அப்துல் ரெஜாக்




இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் வருகின்ற19/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).

Saturday, May 5, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – ஐந்தாவதுக் கூட்டம் !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக ஐந்தாவது கூட்டமாக இன்று ( 04-05-2012 அஸர் தொழுகைக்குப்பின் அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவில் உள்ள ஜும்மா பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்குசகோ. M.S. சிஹாபுதீன் ( AAMFன் ஒருங்கினைப்பாளர் அவர்கள் தலைமையிலும், M.M.S. சேக் நசுருதீன் தலைவர் – AAMF ) மற்றும்பேராசிரியர் M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF )அவர்கள் முன்னிலையிலும்சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம்சகோஅக்பர் ஹாஜியார்சகோஜமீல் M. ஸாலிஹ்,சகோ. C. முஹமது இப்ராகிம் பைத்துல்மால் இணைச்செயலாளர் ), சகோ. B. ஜமாலுதீன் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது. 

நிகழ்ச்சியின் நிரலாக.............


மெளலவிமுஹம்மது இப்ராகிம் ஆலிம் அவர்களால் கிராஅத்
ஓதுப்பட்டது.

M.M.S. சேக் நசுருதீன் தலைவர் – AAMF ) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. 

  அல் அமீன் பள்ளி நிலைப்பாடு சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகிற அவசரக்கூட்டதில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்து பேசுவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக இதுவரைக் கூட்டப்பட்ட அனைத்துக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு என்ன முடிவுக் காணப்பட்டது என்ற சகோ. M.S. சிஹாபுதீன் அவர்களின் கேள்விக்கு விளக்கங்கள் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிரை பேரூராட்சிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்குவதற்காக சம்சுல் இஸ்லாம் சங்கம் துபை கிளை சார்பாக நிதி உதவியாக ரூபாய்  25,000/- பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் “கடற்கரைத் தெரு முஹல்லா“ வின் முக்கியஸ்தர்கள் எனக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கடற்கரைத் தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில்“ வருகின்ற 08-06-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Tuesday, April 17, 2012

வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி....

தற்காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கும் வட்டி அடிப்படையிலான வங்கிகள் (Commercial Banks) அவற்றின் ‘சேவைகளால்’ பிரபலமடைந்திருப்பது நிதரிசனமாகும். அவற்றுக்கு எதிராக நமதூரில் வட்டியின் வாடையே இல்லாத – வட்டியின் நிழலே படியாத – இஸ்லாமிய வங்கிச் சேவையின் முதல் அத்தியாயம், ‘கர்ழன் ஹஸனா’ – அழகிய கடன் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை இதன் மூலம் அறியத் தருகின்றோம்.



ஊரின் எல்லா ஜுமுஆப் பள்ளிகளிலும் நோட்டீஸ் மூலம் அறிவிப்புச் செய்து, இம்மாதம் முதல் இச்சேவை தொடங்கியுள்ளது. முதலில், வட்டியின் மூலம் பெரிதும் பாதிப்படையும் சிறுதொழில் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள், குடிசைத் தொழில் செய்பவர்கள் போன்றவர்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சிறு தொகையைக் கடனாக வழங்கி, முதலில் வட்டிக் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிப்பது இவ்வமைப்பின் முதல் நோக்கமாகும்.

இஸ்லாமிய வழிகாட்டலில் நமது பொருளாதாரத் திட்டத்தை அமைக்க வேண்டும்; அதைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய அனைவரும் இந்தப் புனிதச் சேவையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தும் வாய்ப்பாக, ஒவ்வொருவரும் ரூ 1000 (ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தி, தம்மை இதன் ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கோருகின்றோம். விருப்பமும் ஆர்வமும் வசதியும் உள்ளவர்கள், இதைவிடக் கூடுதலான தொகையைச் செலுத்தித் தம் பங்களிப்பைப் பெரிதாக்கிக் கொள்ளலாம்.

நமதூரில் மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், வசதி பெற்ற வணிகர்கள், மார்க்கப் பற்றுள்ள இளைஞர்கள், மற்றும் கல்வி கற்ற ஆண்-பெண் பொதுமக்கள் நிறையப் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமக்குரிய பங்களிப்பை இந்த ‘அழகிய கடன் அறக்கட்டளை’க்கு வழங்கி, நன்மையிலும் இறையச்சத்திலும் உதவியாளர்களாக இணையுமாறு கோரப்படுகின்றார்கள். இதோ, அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்:

“நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் வரம்பு மீறலுக்கும் நீங்கள் உதவியாளர்களாக இருக்காதீர்கள்!” (05:02)

மேற்கொண்டுள்ள விவரங்களுக்கு இணைப்பு நோட்டீசைப் பார்க்கவும்.


Thanks
Adiraixpress

Saturday, March 31, 2012

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

புதுடெல்லி : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள்

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன்

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள்

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.

நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

Thanks 
Thatstamil


Thursday, March 29, 2012

முதல் "கணினித் தமிழ்ப் படைப்பாளரு"டன் ஒரு சந்திப்பு!



இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான கணினிகளில் ஆங்கிலம் கோலோச்சியபோது,சவூதி அரேபியாவிலுள்ள தமாம் மாநிலத்தின்சட்டத்துறையில் அலுவலகச் செயலராகப் பணியாற்றியவரின் முயற்சியால் அது முதன்முதலாக சாத்தியமானது என்பது பலருக்கும் வியப்ளிக்கும் செய்தியாகவே இருக்கக்கூடும்.

பிரபல மார்க்க அறிஞர் இக்பால் மதனீ அவர்கள் தலைமையிலான குழு, திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்ததைத் தமிழில் தட்டச்சு செய்யும் பணிக்கு உதவியாக கணினியையும் பயன்படுத்த முனைந்தபோது, கணினிகளில் தமிழ் உள்ளீடு செய்யும் வசதிகள் அக்காலகட்டத்தில் இருந்திருக்கவில்லை. MS-Windows V-1 இல் BITMAP EDITOR என்ற மென்பொருள் உதவியால் சுயமாக தமிழ் எழுத்துருக்களை வரைந்து,மற்றொரு மென்பொருள் உதவியால் WINDOWS இயங்குதளத்தில் செயல்படும் கணினிகளில் வாசிக்கும்வகையில் மாற்றப்பட்டு உருவான முதல் எழுத்துருக்களுக்கு TOPAZ, DIAMOND, SAPPHIRE  என்ற பெயர்களிட்டு அழகு தமிழ் கணினியில் முதல் அங்கீகாரம் பெற்ற பெரும் பேறு இவராலேயே கிடைத்தது.

இந்தத் தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கல்ஃப் ந்யூஸ் (20.11.1993) ஆங்கில நாளிதழ், "Tamil in MS Windows" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி இருந்தது. மற்றும் "விண்டோஸில் பவனிவரும் தமிழ்" எனும் தலைப்பில் (ஜென்னி) ஒரு கட்டுரையைத் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழ் (28.8-10.9.1995) வெளியிட்டது. MS WINDOWSல் இயங்கக் கூடிய பல எழுத்துருக்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.ஆனால்90 களின் தொடக்கத்தில் எம் எஸ் விண்டோஸில் இயங்கக் கூடிய எல்லா மென்பொருளையும் தமிழில் காட்டச் செய்தவர் அவர்!.

1995களில் இணையம் பரவலாகப் புழக்கத்திற்கு வரத்தொடங்கியபோது, பல்துறை எழுத்தாளர் சுஜாதா போன்றோர் "மின்னம்பலம்" என்ற தமிழ் இணைய தளத்தில் எழுதி வந்தார்கள்.இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தமிழ் தளங்களே இருந்தன. கணினியில் தமிழ் வாசிக்க அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்தபிறகு, கணினியில் தேவையான மாற்றங்களைச் செய்தால்தான் அந்தந்த நாடுகளுக்கேற்பத் தமிழைத் தெளிவாக வாசிக்க முடியும்.

இந்தச்சூழலில்தான் அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த திருக்குர்ஆன் தமிழிலும் இணையவலம்வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, http://sites.google.com/site/tamilquraan2/ 'இணையத்தில் இறைமறை' என்ற முதல் இஸ்லாமியத் தளம் மட்டுமின்றித் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும் முதல்முதலாய் இணையத்தில் இவரால் வலம் வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு.

கணினி மற்றும் இணைய வல்லுனர்களை உலகத் தரப்படுத்த வழங்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCSE சான்றிதழைத் தமது 50+ வயதில் பெற்று, நவீன கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு முன்மாதிரியாக விளங்கினார். அதிரையர்களின் மின்மடல் குழுமங்களில்,பகிர்ந்து கொள்ளப்பட்ட உரையாடல்களில் சமூக அக்கரை கலந்த கருத்துக்கள் நறுக்குத் தெரித்தாற்போல் 'நச்'சென்று இருக்கும்.

தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம்,அரபி, உர்தூ, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.தாம் பெற்ற கல்வி ஞானத்தைத் தம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்றுபயன்பெற வேண்டுமென்ற ஆவலில் ஷார்ஜாவின் மஸ்ஜித் அல் ஃகலஃப் பழைய கட்டிடத்தில் குர் ஆன் ஓதுவிக்கும் பணியிலும் இளைஞர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். துபையில் யில் இஸ்லாமிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பும் ஏற்றிருந்தார்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2010 கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான மர்ஹூம்.உமர்தம்பி (தமிழ் ஒருங்குரிஎழுத்துக்களை உருவாக்கிய கணிமைக் கொடையாளர்) அவர்களுக்குத் தமிழக அரசின் "தமிழ் இணைய அறிஞர்" என்ற அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சிகளில் இவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நிச்சயம் நன்றிக்குரியவை. 

தமிழகத்தின் பிரபல சமுதாய மற்றும் மார்க்க அறிஞர்கள் இக்பால் மதனீ, கமாலுத்தீன் மதனீ,அப்துல்காதிர் மதனீ, அப்துஸ் ஸமது மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன்,மர்ஹூம்.காயல் S.K., காயல் ஹாமித் பக்ரீ, பேரா.ஜவாஹிருல்லாஹ், S.M. பாக்கர் என அமைப்புப் பேதமின்றி அனைவருடனும் தொடர்பில் இருந்ததோடு அதிரையின் மார்க்க வழிகாட்டி அமைப்பான 'தாருத் தவ்ஹீத்' அழைப்பகத்தின் முன்னோடி. பிரபல எழுத்தாளர் அதிரை அஹமது, "தோழர்கள்" நூருத்தீன் ஆகியோருடனும் தொடர்பிலிருந்து பல்துறை சிந்தனையாளர்களுடன் நட்பிலிருப்பது தற்காலத்தில் அரிய விசயமாகும்.
*******
இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தாலும் கொஞ்சம்கூடப் பெருமையின்றி எளிமையாக,குடத்திலிட்டவிளக்காக, தேனீயாய் உழைத்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் கணினிப்பிரிவில்உயர்பொறுப்பில் இருந்து, இம்மாதம் மார்ச்-2012 முதல் ஓய்வு பெற்றுள்ள நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கடற்கரைத்தெரு @ ஹாஜா நகர் ஜமீல் காக்கா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகள்,மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்,அபிமானிகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் மார்ச்-30,2012  (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் மம்சார் பூங்காவில் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். 

இச்சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் nainathambi@live.in /adiraiwala@gmail.com ஆகிய மின்மடல் முகவரியில் அல்லது             055-4212 575        /              050-4737200       என்ற செல்பேசி எண்களில் மார்ச்-28 ,2012 க்குள் தொடர்பு கொள்ளலாம். 


Thanks
Adiraixpress

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes