Saturday, July 14, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஏழாவதுக் கூட்டம் !


இன்று ( 13-07-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நெசவுத்தெரு முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஏழாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரைக் கவிஞர் தாஹா, சமூக ஆர்வலர் அக்பர் ஹாஜியார், “கணினித்தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவியன்பன்” அபுல் கலாம், அதிரை பைத்துல்மால் நிர்வாகி சகோ. சிபஹத்துல்லா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.




நிகழ்ச்சியின் துளிகள்......

1. கிராஅத் அதிரைக் கவிஞர் தாஹா

2. வரவேற்புரை நிகழ்த்திய “தமிழ் அறிஞர்” அதிரை அஹ்மது அவர்கள் தனது உரையில் “நல்ல நோக்கங்கள் செயல்வடிவம் பெறுவதற்காக இங்கே வருகை புரிந்துள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார்கள்”



3. கடந்த மாதம் ஹளரத் பிலால் ( ரலி ) நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் முடிவுகள் AAMF’ன் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசிக்கப்பட்டது.

4. மாஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் அறிமுக உரையில் அதன் பாரம்பரியத்தையும் மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்துவந்த அச்சங்கத்தின் சிறப்புகளைப் பற்றியும் அதிரைக் கவிஞர் தாஹா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.




5. அரசுப் பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற நெசவுத்தெரு முஹல்லாவைச் சேர்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

6. நமதூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டருடன் இரவு நேர சேவையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு, இறுதியாக இதன் பொறுப்புகளை கவனிக்க கமிட்டி ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.

7. AAMF’ன் பைலா வரைவின் இறுதிவடிவம் பெறுவது தொடர்பாக அடுத்தக் கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

8. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.





குறிப்பு : 


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக “M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் முஹல்லாவில்“ நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes