Saturday, December 15, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டம் !


இன்று [ 14-12-2012 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுத்தெரு மஹல்லாவில் உள்ள மிஸ்கீன் சாஹிப் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், டாக்டர் ஹனீப், முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் மற்றும் புதுத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த அபூ பக்கர், பஷீர் அஹமது ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.


நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. A. முஹம்மது இப்ராஹீம் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் AAMF'ன் அவசியம் குறித்து பேசினார்கள்.

4. சென்றமாத AAMF'ன் எட்டாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இக்கூட்டத்தில் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.



5. AAMF'ன்  பொருளாளர் K.M. பரக்கத் அலி அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, துணை பொருளாளராக  செயல்பட்டுக் கொண்டிருந்த மான் A. நெய்னா முஹம்மது அவர்கள் புதிய பொருளாளராக தொடர்ந்து செயல்படுவார் என அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

6. தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினரிடேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்களிடேயே சுமூகத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இப்பிரச்சனை R.D.O. விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டும் என்று தாங்கள் நம்புவதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் ஒரு சாரார் தெரிவித்ததையடுத்து, நல்லதொரு தீர்வு விரைவாக நிறைவேற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன.

7. நமதூரில் சமிபத்தில் நடந்த துன்பியல் நிகழ்வு குறித்து கீழத்தெரு மஹல்லா சார்பாக AAMF'க்கு வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் அனைவரிடத்திலும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் :

பெறுநர் :
தலைமை நிர்வாகிகள்,
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ]
அதிராம்பட்டினம்

நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வு நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் அமைந்துவிட்டது. 

குற்றவாளி காவல்துறையின் பிடியில் இருப்பதால் அவரின் மேல் உள்ள வழக்கு விசாரணையை எவ்வித குறுக்கீடுகள் இன்றி விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர அதிரை காவல்துறையை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்ள வேண்டும். இவை பாதிக்கப்பட்டோர் சற்று ஆறுதலடையும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலும் இருப்பதாக அமையும். 

பாரம்பரிய மிக்க நமதூரில் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருப்பதுக்குரிய முயற்சியில் இப்போதே நாம் கவனம் எடுத்துக்கொண்டு அவற்றை தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அதிரை அனைத்து மஹல்லா சார்பாக கட்டுக்கோப்புடன் கூடிய ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி அவற்றை அனைத்து மஹல்லாவிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசிமானதாகும்.

பிள்ளையை இழந்துள்ள அக்குடும்பத்திற்கு பொறுமையையும் மன அமைதியையும் வலிமையையும் கொடுப்பாயாக என்று ஏக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக...

இப்படிக்கு,
தலைமை நிர்வாகிகள்
கீழத்தெரு மஹல்லா – அதிரை

வழக்கு விசாரணையில் இருப்பதால் AAMF'ன் கெளரவ சட்ட ஆலோசகர் சகோ. A.J. அப்துல் ரெஜாக் B.A., B.L அவர்களிடம் மேற்படி நடவடிக்கை குறித்து ஆலோசனைகளைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.



8. AAMF சார்பாக நமதூரைச்சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களாகிய ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, நரசிங்கபுரம், கரையூர் தெரு, பழஞ்செட்டித்தெரு, காந்தி நகர், முத்தம்மாள் தெரு போன்ற கிராம பஞ்சாயத்தார்களை சந்திப்பது என்றும், நம்மிடையே நல்லிணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற ஜனவரி இரண்டாவது வாரத்தின் விடுமுறை தினத்திற்கு பிறகு 'சந்திப்பு' நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், மான் A. நெய்னா முஹம்மது, சேக்கனா M.  நிஜாம், P.M.K. தாஜுதீன், M.A. அஹமது ஹாஜா, A. முஹம்மது மொய்தீன்,  இஷாக், E. வாப்பு மரைக்காயர் ஆகியோரைக்கொண்ட குழு ஓன்று நியமனம் செய்யப்பட்டுள்ளன. 

9. இன்று [ 14-12-2012 ]  வாகன விபத்தில் மரணம் அடைந்த சிறுவன் நசீமின் மறுமை வாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக என இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டன.

10. AAMF'ன் ஒன்பதாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  டாக்டர் ஹனீப் ஆகியோர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : 
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில்"நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

2 comments:

Unknown said...

Assalamu Alaikkum,

All the best for the AAMF meeting.

May Almighty Allah accept all good intentions for servicing our community with peace and harmony.

In addition to the solutions for the future issues, there are so many proactive steps are yet to be taken from

* Neat infrastructures of our town
* Awareness programs about education and development of individuals based on right knowledge.
* Individual discipline and character building - making sure mature and gentle citizens,less problems.
* Awareness about Islam and establishing peace in the town
* Cleanliness of environment in nook and corner of the town
* Health awareness and preventing diseases in community
* Town wise consumer awareness entity to fight fraud, and poor quality goods and services(EB, Water, gas) and save our community.

My point is not allowing to occur any issue in the first hand, but prevent it by taking the right steps in the minds of people and in the land(in the long term), and make great model community that can inspire other towns and community to follow us.

Compared with single Muhalla entity I believe by collective groups like AAMF can contribute with their key consultative approach among each Muhalla entities and achieve greater result.

May Allah accept our good intentions for the community.

B. Ahamed Ameen from Dubai

Unknown said...

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ஹாஜாவொலியின் கந்தூரிக் கொடியூர்வலத்தின் பயங்கரமான ஓசை காதுகளைச் செவிடாக்கிர்று! அப்போது பேராசிரியர், "இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இப்படியொரு அனாச்சாரமா?" என்று கேட்டது, பலருடைய காதுகளுக்கு எட்டியிருக்க வாய்ப்பில்லை; காதுகளுக்கு எட்டினாலும், அது 'செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான்' ஆகியது. "இதுக்கு ஒரு முடிவு காட்டுங்களேன்" என்று ஒருவர் கத்தியதும் அவர்களின் காதுகளில் கேட்டிருக்காது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes