Sunday, August 19, 2012
Saturday, August 18, 2012
Eid Al Fitr in UAE will be on Sunday
Abu Dhabi: Eid Al Fitr will be on Sunday, August 19, in the UAE, the Moon Sighting Committee announced on Friday.
The committee, which met on Friday under the chairmanship of Dr Hadef Jouan Al Daheri, Minister of Justice, said upon verification and sighting of the crescent moon in coordination with the neighbouring sisterly countries, that Saturday, August 18, will be the last day of Ramadan, and Sunday, August 19, will be the first day of Shawwal month.
On this auspicious occasion, the committee extended its heartfelt congratulations to President His Highness Shaikh Khalifa Bin Zayed Al Nahyan, His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, Their Highnesses Supreme Council Members and Rulers of the Emirates, General Shaikh Mohammad Bin Zayed Al Nahyan, Abu Dhabi Crown Prince and Deputy Supreme Commander of the UAE Armed Forces, Crown Princes, and to the people of the UAE.
Friday, August 10, 2012
AAMF-இன் இரண்டாம் ஆண்டு நோன்பு பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.
உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும்ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.
அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் நோன்பு பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.
குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Mr. Thameem 050-7480023 சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா
Mr. Ajmal 050-4963848 தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு முஹல்லா
Mr. Meeramohindeen 055-2320145 அல் மதரஸத்துன் நுருல் முஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Ismail 055-6077680 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி முஹல்லா
Mr. Mohideen 050-5785239 மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina 050-7397093 முகைதீன் ஜீம்மா பள்ளி முஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114 மிஷ்கீன் சாஹிப் பள்ளி முஹல்லா
அன்புடன்,
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF)
ஈத் பெருநாள் சந்திப்பு குழு
UAE
அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF)
ஈத் பெருநாள் சந்திப்பு குழு
UAE
Wednesday, August 8, 2012
Thursday, July 19, 2012
புனித ரமலானில் AAMF-ன் தலைமையில் நோன்பு கஞ்சி விநியோகம்.
துபாய்-டேரா பகுதி அதிரைவாசிகளுக்கு ஓர் வேண்டுகோள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராக்காதுஹு.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கடந்த வருடம் ரமலானில் அடித்தளமிடப்பட்டு துபாய் கிரஸண்ட் பள்ளியில் தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த ஒருவருடமாக அதிரைவாசிகளை ஒருங்கிணக்கும் முயற்சியாக அதிரைக்கு உட்பட்ட 9 முஹல்லாஹ்களிலும் மாதம் ஒன்றாக கலந்தாய்வு மற்றும் ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்!.
உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகள் பல்வேறு தொடர்புகள் மூலம் ஒருங்கிணைத்து ஊரளவிலான திட்டங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளை பின்னணியில் ஈடுபட்டுவருகிறது.
எதிர்வரும் ரமலானில் துபாய் டேரா பகுதியிலுள்ள வாழைமரத்தடிப் பள்ளியில் இஃப்தாரின்போது நோன்பு கஞ்சி விநியோகிக்கும் பொறுப்பை துபாயின் பிரபல இஸ்லாமிய அமைப்பான ஈமான் (IMAN) அமைப்பு நமது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டதன்பேரில், அவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று, அல்லாஹ்வின் பொருத்தம்நாடி இன்ஷா அல்லாஹ் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி பரிமாற ஒப்புக்கொண்டுள்ளோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரையின் அடையாளமாக அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு திகழ்வதாகவே இந்த வாய்ப்பு நமக்கு உணர்த்துகிறது (அல்ஹம்துலில்லாஹ்). நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்து நன்மையைக் அள்ளிச்செல்லும் இந்த உன்னத பணிக்கு ஆர்முள்ள அதிரைவாசிகள் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தயார் நிலையில் உள்ள அடையாள அட்டை மற்றும் பிற ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவாக இருக்கும்.
தலைவர் செயலாளர்
050-7480023 050-4963848
இப்படிக்கு,
AAMF நிர்வாகம்
அமீரக கிளைAAMF நிர்வாகம்
Saturday, July 14, 2012
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஏழாவதுக் கூட்டம் !
இன்று ( 13-07-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நெசவுத்தெரு முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஏழாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரைக் கவிஞர் தாஹா, சமூக ஆர்வலர் அக்பர் ஹாஜியார், “கணினித்தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவியன்பன்” அபுல் கலாம், அதிரை பைத்துல்மால் நிர்வாகி சகோ. சிபஹத்துல்லா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியின் துளிகள்......
1. கிராஅத் அதிரைக் கவிஞர் தாஹா
2. வரவேற்புரை நிகழ்த்திய “தமிழ் அறிஞர்” அதிரை அஹ்மது அவர்கள் தனது உரையில் “நல்ல நோக்கங்கள் செயல்வடிவம் பெறுவதற்காக இங்கே வருகை புரிந்துள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார்கள்”
3. கடந்த மாதம் ஹளரத் பிலால் ( ரலி ) நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் முடிவுகள் AAMF’ன் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசிக்கப்பட்டது.
4. மாஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் அறிமுக உரையில் அதன் பாரம்பரியத்தையும் மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்துவந்த அச்சங்கத்தின் சிறப்புகளைப் பற்றியும் அதிரைக் கவிஞர் தாஹா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
5. அரசுப் பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற நெசவுத்தெரு முஹல்லாவைச் சேர்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
6. நமதூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டருடன் இரவு நேர சேவையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு, இறுதியாக இதன் பொறுப்புகளை கவனிக்க கமிட்டி ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.
7. AAMF’ன் பைலா வரைவின் இறுதிவடிவம் பெறுவது தொடர்பாக அடுத்தக் கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
8. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக “M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் முஹல்லாவில்“ நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
Friday, July 13, 2012
Monday, July 2, 2012
AAMF’ன் சார்பாக மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு !
கடந்த ( 08-06-2012 ) அன்று ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் ஹஜ்ரத் பிலால் நகர், M.S.M. நகர், K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இன்று மாவட்ட ஆட்சியரை AAMF’ன் சார்பாக சந்தித்து ஒப்படைக்கப்பட்டது.
இக்கோரிக்கை மனு மீது ஆய்வுக்கு உட்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149 ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உள்ளடக்கிய ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் ஆகும்.
இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு ஆவணம் செய்யும் படி தங்களை அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கடந்த 23-03-2012 அன்று கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளவது தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை அடுத்து, இதற்காக சம்பந்தப்பட்ட தென் இந்திய ரயில்வே துறை – திருச்சி கோட்ட தலைமை அலுவலர்கள் ( DRM மற்றும் DCM ) ஆகியோர்களை வருகின்ற வாரங்களில் சந்தித்து மனு அளிப்பது என்றும், இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக நமதூரைச் சேர்ந்த பொது நல அமைப்பான “அதிரை நல் வாழ்வு பேரவை”, சென்னை வாழ் அதிரை நலப் பேரவை” , அதிரை வர்த்தக சங்கம், மனித உரிமை கழகம் போன்றவைகள் ஒன்றாகச் திருச்சி சென்று மனுவை தனித்தனியே அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் – இது சேது பெருவழிச்சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையோர ஊர். இங்கு சுமார் அறுபது ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய பரந்த பகுதியாகவும், அதிக விவசாயிகளைப் பெற்ற இக்கடைமடைப் பகுதியைச் சுற்றி கடற்கரையோர கிராமங்களான ஏரிபுறக்கரை, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், மீமிசல் போன்ற பகுதிகளும் உள்ளன.
இவ்வூரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து ஆம்னி பஸ்கள் தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கின்றன, அதேபோல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வருகின்றன. இதனால் ஆகக்கூடிய கூடுதலான செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வயோதியர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் போன்றோர்கள் பெரும் அவதிக்கும், இன்னலுக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரும் விரும்புவது ரயிலில் பயணங்கள் மேற்கொள்வதையே இதற்காக டிக்கட் முன்பதிவு செய்வதற்காக தொலைதூரத்திலுள்ள பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை, திருத்துறைபூண்டி போன்ற ஊர்களுக்குச் சென்று தங்களுடைய நேரம், வீண் அலைச்சல் போன்றவற்றை செலவழிப்பதோடு அல்லாமல் நீண்ட வரிசையில் நின்று காத்துக்கிடக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய ரயில்வே துறையிலிருந்து அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முன் பதிவு செய்யும் உபகரணங்கள் அனைத்தும் இப்பணியை மேற்கொள்ள நிரந்தர ஊழியர் ஒருவர் இல்லாமல் பயனற்று முடங்கிபோய் கிடக்கின்றன.
ஆகையால் அதிராம்பட்டினம் மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் படுகின்ற சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இதற்காக நிரந்தர ஊழியர் ஒருவரை பணி நியமனம் செய்து “டிக்கெட் முன் பதிவு” செய்யும் வசதியை துவக்க வேண்டுமாய் அதிகாரி அவர்களை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.