Wednesday, November 7, 2012

பிலால் நகர் : AAMF – ABM இனைந்து வழங்கிய வெள்ள நிவாரண நிதி உதவி !!!




பிலால் நகர் - நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேரில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என குடிசைகளில் வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் சமிபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து ஆங்காங்கே வெள்ளக்காடு போல் காட்சியளித்தன. இதையடுத்து பாதிப்புக்குள்ளான வெள்ளப்பகுதிகளை படம்பிடித்து காணொளி வடிவில் நமதூர் வலைதளங்களில் பதிவு செய்து வெளியிடப்பட்டன.

சமூக ஆர்வலரும், AAMF – இலண்டன் கிளையின் ஒருங்கிணைப்பாளருமாகிய சகோ. இம்தியாஸ் அவர்களின் முயற்சியால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு - இலண்டன் கிளை சார்பாக ரூபாய் 25,725/- வசூல் செய்து அனுப்பி வைத்தனர். இப்பணத்தை பாதிக்கப்பட்ட பிலால் நகர் பொதுமக்களுக்கு AAMF – ABM இனைந்து வழங்கும் வெள்ள நிவாரண நிதி உதவியாக விநியோகம் செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டதையடுத்து, 

இன்று [ 06-11-2012 ] மாலை சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...




அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்த தலைமை நிர்வாகிகள் :
ஜனாப் M.M.S. சேக் நசுருதீன் 
ஜனாப் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் 
ஜனாப் K.M. பரகத் அலி
ஜனாப் M.A. அஹமது ஹாஜா
ஜனாப் S.M.A. அஹமது கபீர்
ஜனாப் மான் A. நெய்னா முஹம்மது
ஜனாப் A. முஹம்மது மொய்தீன்
ஜனாப் E. வாப்பு மரைக்காயர்

அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் :
ஜனாப் பேராசிரியர் S. பரகத்
ஜனாப் S. அப்துல் ஹமீத்
ஜனாப் O.K.M. சிபஹத்துல்லா

ஆகியோர் பங்களிப்புடன் பிலால் நகர் பகுதியில் குடிசையில் வசிக்கும் 50 பேருக்கு தலா ரூபாய் 500/- வீதமும், ஒரு நபருக்கு ரூபாய்  725/- ம் வழங்கப்பட்டன. அனைத்து பயனாளிகளும்  வருகை தந்து அவர்களுக்குரிய நிதியினை பெற்றுச்சென்றனர்.






நிகழ்ச்சியின் இடையே மூதாட்டி ஒருவர் 'தனக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை' என்ற வேண்டுகோளை வைத்தார் இதையடுத்து AAMF'ன் செயலாளரும், பேராசிரியருமாகிய சகோ. M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தன்னுடைய பாக்கெட்லிருந்து ரூபாய் 500/- ஐ அம்மூதாட்டிக்கு வழங்கியது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழவைத்தது. 

நிதி உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும், துஆவையும் AAMF  மற்றும் ABM சார்பாக இந்நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சிக்குரிய அனைத்து பொறுப்புகளையும் சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக செய்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Friday, October 26, 2012

துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)



அஸ்ஸலாமு அலைக்கும், 
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

காலை 6:50 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 7:30 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.




 சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
 அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
















அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு “AAMF” சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

துபாய் - AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு – 2012


காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில்...

Wednesday, October 24, 2012

AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா 
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ்  பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Ismail  055-6077680                 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி மஹல்லா
Mr. Ajmal  050-4963848     தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா
Mr. Meeramohindeen 055-2320145   அல் மதரஸத்துன் நுருல் மஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Mohideen  050-5785239     மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina  050-7397093    முகைதீன் ஜீம்மா பள்ளி மஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114                 மிஷ்கீன் சாஹிப் பள்ளி மஹல்லா
Mr. Abdul Jabbar   055-8219432            சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா
  
அன்புடன்,
அனைத்து
 மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத்
 பெருநாள் சந்திப்பு குழு
UAE

Saturday, October 20, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டம் !


இன்று ( 19-10-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் மஹல்லாவில் உள்ள ரஹ்மான் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் சகோ. அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.



நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : சேக்தாவுது ஆலிம் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் 'கூட்டத்தின் ஒழுங்கீனம்பற்றி' குறிப்பிட்டு பேசினார்கள்.

4. சகோ. வாப்பு மரைக்காயர் அவர்கள் தனது அறிமுக உரையில் 'M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் உருவாகிய வரலாறு பற்றி குறிப்பிட்டு பேசினார்கள்.

5. நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக [ மவுத் ] குழி வெட்டுதலில் ஈடுபடும் சகோதரர்களுக்கு காலதாமதமில்லாமல் அவர்களுடைய ஊதியம் அவர்களுக்கு சென்றடையும் வகையில் கையிருப்பு தொகை இருப்பதின் அவசியம் எடுத்துப்பேசப்பட்டன. இதற்குரிய உதவிகளுக்கு  முயற்சிக்கும்படி அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் தனது வேண்டுகோளாக வைத்தார் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள். 

6. முதன் முதலாக AAMF'ன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதம் நகர் மஹல்லாவாசியான மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களை வரவேற்று அனைவரிடத்திலும் அறிமுகம் செய்துவைத்து அவர்களின் சமூகம் சார்ந்த எழுத்துப்பணிகள் பற்றி குறிப்பிட்டு பேசினார் பேராசிரியர்  M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள்.

7. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் போன்றவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குவதற்காக குழு ஓன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், சேக்கனா M.  நிஜாம் மற்றும் மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரை நியமணம் செய்யப்பட்டுள்ளது.

8. AAMF'ன் பைலா அடுத்தக் கூட்டத்தில் இறுதிவடிவம் செய்யப்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

9. அனைத்து மஹல்லாவின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு திருமண பதிவேடு புத்தகத்தை அந்ததந்த மஹல்லாவிற்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

10. முஹல்லா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'மஹல்லா' என்ற சரியான வார்த்தையை அனைத்து தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டன.


11. இதய சிகிச்சைக்காக சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு சகோ. இம்தியாஸ் மூலம் பெறப்பட்ட ரூபாய் 17,300/- AAMF'ன் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு, அவர் விரைவில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப இறைவனிடம் 'துஆ'ச்செய்ய அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

12. அரசின் சார்பாக ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக நம்மைப்பற்றிய உடற்கூறு ரீதி ஆதாரங்கள் [ புகைப்படம், அங்க அடையாளங்கள் போன்றவை ] எடுக்கும் பணிகள் நமதூரில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குரிய ஆவணங்களை அலுவலரிடம் சமர்பித்து தவறாது எடுத்துக்கொள்ளும்படி அனைவரிடமும் வேண்டுகோள் விடப்பட்டன.

13. AAMF'ன் எட்டாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சகோதரர்கள் இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது ஆகியோர் முதல் முறையாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.





குறிப்பு : 
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "புதுத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Friday, October 12, 2012

அமீரக AAMF-ன் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: தாஹா நெசவு தெரு முஹல்லா, சார்ஜா
 தேதி: 11-10-2012

அமீரக AAMF-யின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் தலைவர்  A. தமீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமர்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...

1. AAMF - யின் 2013 ஆண்டு காலண்டர் வினியோகிப்பது சம்மந்தமாக ஸ்பான்ஸ்சர்களை அணுகி காலண்டர்காண பொருளாதாரத்தை ஈட்டுவது, அது முடியாத பட்சத்தில் அனைத்து முஹல்லாக்களின் பங்களிப்புடன் தொகையை வசூழித்து அச்சிட்டு வினியோகிப்பது.
2. தரகர் தெரு முஹல்லா ஜாமாத்தை ஒருகிணைப்பது.
3. அதிரையில் AAMF சட்டப்புர்வமாக பதிவு (REGISTER) செய்வதை துரிதப்படுத்துவது.




இப்படிக்கு,
AAMF-UAE


Sunday, September 9, 2012

அதிரை காவல்துறையின் அழைப்பை ஏற்று அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !


இன்று இரவு 8 மணியளவில் நமதூர் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

1. அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் அழைப்பை ஏற்று நமதூர் அனைத்து முஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. வருகின்ற 22-09-2012 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் மூர்த்தி’ ஊர்வலத்திற்கு எவ்வித அசாம்பவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் தங்களுடைய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.


 




 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes