Saturday, March 31, 2012

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

புதுடெல்லி : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள்

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன்

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள்

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.

நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

Thanks 
Thatstamil


Thursday, March 29, 2012

முதல் "கணினித் தமிழ்ப் படைப்பாளரு"டன் ஒரு சந்திப்பு!



இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான கணினிகளில் ஆங்கிலம் கோலோச்சியபோது,சவூதி அரேபியாவிலுள்ள தமாம் மாநிலத்தின்சட்டத்துறையில் அலுவலகச் செயலராகப் பணியாற்றியவரின் முயற்சியால் அது முதன்முதலாக சாத்தியமானது என்பது பலருக்கும் வியப்ளிக்கும் செய்தியாகவே இருக்கக்கூடும்.

பிரபல மார்க்க அறிஞர் இக்பால் மதனீ அவர்கள் தலைமையிலான குழு, திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்ததைத் தமிழில் தட்டச்சு செய்யும் பணிக்கு உதவியாக கணினியையும் பயன்படுத்த முனைந்தபோது, கணினிகளில் தமிழ் உள்ளீடு செய்யும் வசதிகள் அக்காலகட்டத்தில் இருந்திருக்கவில்லை. MS-Windows V-1 இல் BITMAP EDITOR என்ற மென்பொருள் உதவியால் சுயமாக தமிழ் எழுத்துருக்களை வரைந்து,மற்றொரு மென்பொருள் உதவியால் WINDOWS இயங்குதளத்தில் செயல்படும் கணினிகளில் வாசிக்கும்வகையில் மாற்றப்பட்டு உருவான முதல் எழுத்துருக்களுக்கு TOPAZ, DIAMOND, SAPPHIRE  என்ற பெயர்களிட்டு அழகு தமிழ் கணினியில் முதல் அங்கீகாரம் பெற்ற பெரும் பேறு இவராலேயே கிடைத்தது.

இந்தத் தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கல்ஃப் ந்யூஸ் (20.11.1993) ஆங்கில நாளிதழ், "Tamil in MS Windows" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி இருந்தது. மற்றும் "விண்டோஸில் பவனிவரும் தமிழ்" எனும் தலைப்பில் (ஜென்னி) ஒரு கட்டுரையைத் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழ் (28.8-10.9.1995) வெளியிட்டது. MS WINDOWSல் இயங்கக் கூடிய பல எழுத்துருக்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.ஆனால்90 களின் தொடக்கத்தில் எம் எஸ் விண்டோஸில் இயங்கக் கூடிய எல்லா மென்பொருளையும் தமிழில் காட்டச் செய்தவர் அவர்!.

1995களில் இணையம் பரவலாகப் புழக்கத்திற்கு வரத்தொடங்கியபோது, பல்துறை எழுத்தாளர் சுஜாதா போன்றோர் "மின்னம்பலம்" என்ற தமிழ் இணைய தளத்தில் எழுதி வந்தார்கள்.இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தமிழ் தளங்களே இருந்தன. கணினியில் தமிழ் வாசிக்க அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்தபிறகு, கணினியில் தேவையான மாற்றங்களைச் செய்தால்தான் அந்தந்த நாடுகளுக்கேற்பத் தமிழைத் தெளிவாக வாசிக்க முடியும்.

இந்தச்சூழலில்தான் அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த திருக்குர்ஆன் தமிழிலும் இணையவலம்வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, http://sites.google.com/site/tamilquraan2/ 'இணையத்தில் இறைமறை' என்ற முதல் இஸ்லாமியத் தளம் மட்டுமின்றித் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும் முதல்முதலாய் இணையத்தில் இவரால் வலம் வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு.

கணினி மற்றும் இணைய வல்லுனர்களை உலகத் தரப்படுத்த வழங்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCSE சான்றிதழைத் தமது 50+ வயதில் பெற்று, நவீன கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு முன்மாதிரியாக விளங்கினார். அதிரையர்களின் மின்மடல் குழுமங்களில்,பகிர்ந்து கொள்ளப்பட்ட உரையாடல்களில் சமூக அக்கரை கலந்த கருத்துக்கள் நறுக்குத் தெரித்தாற்போல் 'நச்'சென்று இருக்கும்.

தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம்,அரபி, உர்தூ, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.தாம் பெற்ற கல்வி ஞானத்தைத் தம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்றுபயன்பெற வேண்டுமென்ற ஆவலில் ஷார்ஜாவின் மஸ்ஜித் அல் ஃகலஃப் பழைய கட்டிடத்தில் குர் ஆன் ஓதுவிக்கும் பணியிலும் இளைஞர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். துபையில் யில் இஸ்லாமிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பும் ஏற்றிருந்தார்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2010 கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான மர்ஹூம்.உமர்தம்பி (தமிழ் ஒருங்குரிஎழுத்துக்களை உருவாக்கிய கணிமைக் கொடையாளர்) அவர்களுக்குத் தமிழக அரசின் "தமிழ் இணைய அறிஞர்" என்ற அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சிகளில் இவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நிச்சயம் நன்றிக்குரியவை. 

தமிழகத்தின் பிரபல சமுதாய மற்றும் மார்க்க அறிஞர்கள் இக்பால் மதனீ, கமாலுத்தீன் மதனீ,அப்துல்காதிர் மதனீ, அப்துஸ் ஸமது மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன்,மர்ஹூம்.காயல் S.K., காயல் ஹாமித் பக்ரீ, பேரா.ஜவாஹிருல்லாஹ், S.M. பாக்கர் என அமைப்புப் பேதமின்றி அனைவருடனும் தொடர்பில் இருந்ததோடு அதிரையின் மார்க்க வழிகாட்டி அமைப்பான 'தாருத் தவ்ஹீத்' அழைப்பகத்தின் முன்னோடி. பிரபல எழுத்தாளர் அதிரை அஹமது, "தோழர்கள்" நூருத்தீன் ஆகியோருடனும் தொடர்பிலிருந்து பல்துறை சிந்தனையாளர்களுடன் நட்பிலிருப்பது தற்காலத்தில் அரிய விசயமாகும்.
*******
இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தாலும் கொஞ்சம்கூடப் பெருமையின்றி எளிமையாக,குடத்திலிட்டவிளக்காக, தேனீயாய் உழைத்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் கணினிப்பிரிவில்உயர்பொறுப்பில் இருந்து, இம்மாதம் மார்ச்-2012 முதல் ஓய்வு பெற்றுள்ள நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கடற்கரைத்தெரு @ ஹாஜா நகர் ஜமீல் காக்கா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகள்,மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்,அபிமானிகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் மார்ச்-30,2012  (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் மம்சார் பூங்காவில் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். 

இச்சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் nainathambi@live.in /adiraiwala@gmail.com ஆகிய மின்மடல் முகவரியில் அல்லது             055-4212 575        /              050-4737200       என்ற செல்பேசி எண்களில் மார்ச்-28 ,2012 க்குள் தொடர்பு கொள்ளலாம். 


Thanks
Adiraixpress

Saturday, March 24, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – நான்காவது கூட்டம் !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக நான்காவது கூட்டமாக இன்று ( 23-03-2012 )  அஸர் தொழுகைப்பின் நமதூர் கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S.சேக் நசுருதீன் தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர்  M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், ஆசிரியர் சகோ. முகமது அலியார் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.  
நிகழ்ச்சியின் நிரலாக...........................
சகோ. அதிரை அஹமது அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.
அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு சார்பாக கடந்த 24/02/2012  அன்று நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகிய இரு நிர்வாகத்தினரும் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.
இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ. பரகத் அலி மற்றும் அதிரை சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர்கள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அகமது அன்சாரி அவர்களால் சில நாட்களுக்கு முன்பாக வழக்கு சம்பந்தமான “தன்னிலை விளக்கம்” ஓன்று நோட்டிசாக விநியோகிக்கப்பட்டது ( விரைவில் இவை பதிவுக்குள் கொண்டுவரப்படும் )


AAMF ன் சார்பாக இந்த நோட்டிசை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக இப்பிரச்சனையை AAMF கையிலெடுத்து சுமுகமாக தீர்த்து வைப்பது என்றும் இதற்காக தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுங்கப்பட்டு கீழ்க்கண்ட குழு ஓன்று நியமணம் செய்யப்பட்டது.

அதிரை அஹமது
M. நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )
P.M.K. தாஜுதீன்
மான் A. நெய்னா முகமது
K. யாஹியா கான்
J. சாகுல் ஹமீது
A. முகமது மொய்தீன்
E. வாப்பு மரைக்காயர்
T.A. அகமது அனஸ்

மேலும் கூடுதலாக AAMF ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், சகோ. S.M.A.  அக்பர் ஹாஜியார், M. A. அஹமது ஹாஜா மற்றும் பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்கள் இக்குழுவில் இடம்பெற்று சமரசம் ஏற்பட உறுதுணையாக இருப்பார்கள்.

இக்குழு விரைவில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கும்  இன்ஷா அல்லாஹ் ! )



சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் AAMF ’ன் இரண்டாவது கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு  AAMF ன் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சார்பாக அனைத்து முஹல்லா நிர்வாகிகளுக்கும் “நினைவூட்டல் கடிதம்” அனுப்பப்பட்டு, அதில் நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நமதூரில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.
நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக ஏற்கனவே இவ்வழக்குகளை கையாள்வதற்காக சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கிற்காக கீழத்தெரு முஹல்லா நிர்வாகத்தினர் சார்பாக ருபாய் 5000/- நிதி உதவி ஆசிரியர் சகோ. முகமது அலியார் அவர்களின் முன்னிலையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை ஆனந்தா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் உரிமையாளர்கள் கொடுத்த மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக்வா பள்ளி மீன் மார்க்கெட் சம்பந்தமாக இரு தரப்பினர்கள் இடையே சமீபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வைக் கருத்தில் கொண்டு இருதரப்பினர்களிடேயே சமரசம் ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுமுகமாக முடித்து தந்த சகோ. சேக்தாவுது ( கீழத்தெரு முஹல்லா ) மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்களுக்கு AAMF ன் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 
அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அரசு மருத்துவமனை இரவு நேர சேவை, அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ள, SDPI மற்றும் த.மு.மு.க. ஆகிய இரு சமுதாய அமைப்புகளுக்குள் சமிபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வை மறந்து அவர்களிடேய ஒற்றுமையை ஏற்படுத்துவது, பெரிய ஜும்மா பள்ளியில் “சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு” போன்றவைகள் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  



நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கீழத்தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ கடற்கரைத்தெரு முஹல்லாவில் “ வருகிற 04-05-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Wednesday, February 29, 2012

AAMF- யின் வாழ்த்து



Saturday, February 25, 2012

அதிரை அல் அமீன் பள்ளி : நீண்ட விவாதத்தில் சுமூக முடிவு !



அதிரை "அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு " சார்பாக இன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள் 


இக்கூட்டத்திற்குப் அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )சார்பாக அதன் நிர்வாகிகள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா போன்ற அதிரையைச் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் நிரலாக....................
1.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான விவாதம் சுமார் 4 மணி நேரங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.


2.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமாக இதுவரையில் கூட்டப்பட்ட ஆறு கூட்டங்களும் தோல்வியில் முடிந்தது என்றும் இந்த ஏழாவது கூட்டம் கண்டிப்பாக வெற்றியாக அமையவேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி அவர்களின் வழக்குகள் சம்மந்தமான விளக்கங்களுடன் கூடிய உரை சுமார் 1.30மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
4.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகம் சார்பாக வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய நகல்கள் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் கொடுக்கப்பட்டது.
5.       இப்பள்ளி அமைய மர்ஹூம் M.M.S. அப்துல் வஹாப் சாச்சா அவர்கள் எவ்வாறு உதவி புரிந்தார்கள் என்பதை அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி , அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )  தலைவர் M.M.S. சேக் நசுருதீன் போன்றோர்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
     6.       அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) செயலாளர்  பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லாம் மற்றும் உறுப்பினர்கள் சகோ. இப்ராகிம், சகோ. செய்யது, சகோ.காதர், ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொருளாளர் சகோ. செய்யது, சகோ. சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சகோ.அன்வர் அலி ஆகியோர்கள் உரைகள் நிகழ்த்தி அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டப்பட்டது
7.       நிகழ்ச்சிகளை தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
கூட்டத்தின் தீர்மானம் :
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகியோர்கள் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர்M.M.S. சேக் நசுருதீன்,  செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ.ரகத் அலி மற்றும் அதிரை இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

Thanks : Adirai.in




 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes