Thursday, July 19, 2012

புனித ரமலானில் AAMF-ன் தலைமையில் நோன்பு கஞ்சி விநியோகம்.


துபாய்-டேரா பகுதி அதிரைவாசிகளுக்கு ஓர் வேண்டுகோள்.

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராக்காதுஹு.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கடந்த வருடம் ரமலானில் அடித்தளமிடப்பட்டு துபாய் கிரஸண்ட் பள்ளியில் தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த ஒருவருடமாக அதிரைவாசிகளை ஒருங்கிணக்கும் முயற்சியாக அதிரைக்கு உட்பட்ட 9 முஹல்லாஹ்களிலும் மாதம் ஒன்றாக கலந்தாய்வு மற்றும் ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்!.

உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகள் பல்வேறு தொடர்புகள் மூலம் ஒருங்கிணைத்து ஊரளவிலான திட்டங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளை பின்னணியில் ஈடுபட்டுவருகிறது.

எதிர்வரும் ரமலானில் துபாய் டேரா பகுதியிலுள்ள வாழைமரத்தடிப் பள்ளியில் இஃப்தாரின்போது நோன்பு கஞ்சி  விநியோகிக்கும் பொறுப்பை துபாயின் பிரபல இஸ்லாமிய அமைப்பான ஈமான் (IMAN) அமைப்பு நமது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டதன்பேரில், அவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று, அல்லாஹ்வின் பொருத்தம்நாடி இன்ஷா அல்லாஹ் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி பரிமாற  ஒப்புக்கொண்டுள்ளோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரையின் அடையாளமாக அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு திகழ்வதாகவே இந்த வாய்ப்பு நமக்கு உணர்த்துகிறது (அல்ஹம்துலில்லாஹ்).  நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்து நன்மையைக் அள்ளிச்செல்லும் இந்த உன்னத பணிக்கு ஆர்முள்ள அதிரைவாசிகள் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தயார் நிலையில் உள்ள அடையாள அட்டை மற்றும் பிற ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவாக இருக்கும்.

தலைவர்                                                          செயலாளர்
050-7480023                                                   050-4963848

இப்படிக்கு,
AAMF நிர்வாகம்
அமீரக கிளை

Saturday, July 14, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஏழாவதுக் கூட்டம் !


இன்று ( 13-07-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நெசவுத்தெரு முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஏழாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரைக் கவிஞர் தாஹா, சமூக ஆர்வலர் அக்பர் ஹாஜியார், “கணினித்தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவியன்பன்” அபுல் கலாம், அதிரை பைத்துல்மால் நிர்வாகி சகோ. சிபஹத்துல்லா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.




நிகழ்ச்சியின் துளிகள்......

1. கிராஅத் அதிரைக் கவிஞர் தாஹா

2. வரவேற்புரை நிகழ்த்திய “தமிழ் அறிஞர்” அதிரை அஹ்மது அவர்கள் தனது உரையில் “நல்ல நோக்கங்கள் செயல்வடிவம் பெறுவதற்காக இங்கே வருகை புரிந்துள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார்கள்”



3. கடந்த மாதம் ஹளரத் பிலால் ( ரலி ) நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் முடிவுகள் AAMF’ன் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசிக்கப்பட்டது.

4. மாஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் அறிமுக உரையில் அதன் பாரம்பரியத்தையும் மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்துவந்த அச்சங்கத்தின் சிறப்புகளைப் பற்றியும் அதிரைக் கவிஞர் தாஹா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.




5. அரசுப் பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற நெசவுத்தெரு முஹல்லாவைச் சேர்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

6. நமதூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டருடன் இரவு நேர சேவையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு, இறுதியாக இதன் பொறுப்புகளை கவனிக்க கமிட்டி ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.

7. AAMF’ன் பைலா வரைவின் இறுதிவடிவம் பெறுவது தொடர்பாக அடுத்தக் கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

8. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.





குறிப்பு : 


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக “M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் முஹல்லாவில்“ நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Friday, July 13, 2012

Monday, July 2, 2012

AAMF’ன் சார்பாக மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு !

கடந்த ( 08-06-2012 ) அன்று ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் ஹஜ்ரத் பிலால் நகர், M.S.M. நகர், K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இன்று மாவட்ட ஆட்சியரை AAMF’ன் சார்பாக சந்தித்து ஒப்படைக்கப்பட்டது.

இக்கோரிக்கை மனு மீது ஆய்வுக்கு உட்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

கோரிக்கை மனுவின் விவரம் :

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149 ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உள்ளடக்கிய ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் ஆகும்.

இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு ஆவணம் செய்யும் படி தங்களை அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கடந்த 23-03-2012 அன்று கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளவது தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை அடுத்து, இதற்காக சம்பந்தப்பட்ட தென் இந்திய ரயில்வே துறை – திருச்சி கோட்ட தலைமை அலுவலர்கள் ( DRM மற்றும் DCM ) ஆகியோர்களை வருகின்ற வாரங்களில் சந்தித்து மனு அளிப்பது என்றும், இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக நமதூரைச் சேர்ந்த பொது நல அமைப்பான “அதிரை நல் வாழ்வு பேரவை”, சென்னை வாழ் அதிரை நலப் பேரவை” , அதிரை வர்த்தக சங்கம், மனித உரிமை கழகம் போன்றவைகள் ஒன்றாகச் திருச்சி சென்று மனுவை தனித்தனியே அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவின் விவரம் :

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் – இது சேது பெருவழிச்சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையோர ஊர். இங்கு சுமார் அறுபது ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய பரந்த பகுதியாகவும், அதிக விவசாயிகளைப் பெற்ற இக்கடைமடைப் பகுதியைச் சுற்றி கடற்கரையோர கிராமங்களான ஏரிபுறக்கரை, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், மீமிசல் போன்ற பகுதிகளும் உள்ளன.

இவ்வூரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து ஆம்னி பஸ்கள் தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கின்றன, அதேபோல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வருகின்றன. இதனால் ஆகக்கூடிய கூடுதலான செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வயோதியர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் போன்றோர்கள் பெரும் அவதிக்கும், இன்னலுக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரும் விரும்புவது ரயிலில் பயணங்கள் மேற்கொள்வதையே இதற்காக டிக்கட் முன்பதிவு செய்வதற்காக தொலைதூரத்திலுள்ள பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை, திருத்துறைபூண்டி போன்ற ஊர்களுக்குச் சென்று தங்களுடைய நேரம், வீண் அலைச்சல் போன்றவற்றை செலவழிப்பதோடு அல்லாமல் நீண்ட வரிசையில் நின்று காத்துக்கிடக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய ரயில்வே துறையிலிருந்து அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முன் பதிவு செய்யும் உபகரணங்கள் அனைத்தும் இப்பணியை மேற்கொள்ள நிரந்தர ஊழியர் ஒருவர் இல்லாமல் பயனற்று முடங்கிபோய் கிடக்கின்றன.

ஆகையால் அதிராம்பட்டினம் மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் படுகின்ற சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இதற்காக நிரந்தர ஊழியர் ஒருவரை பணி நியமனம் செய்து “டிக்கெட் முன் பதிவு” செய்யும் வசதியை துவக்க வேண்டுமாய் அதிகாரி அவர்களை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, June 15, 2012

ஒற்றுமை வழி உறுத்தி அமீரக AAMF

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



அஸ்ஸலாமு அலைக்கும்
AAMF அமீரக கிளை-யின் மாதந்திர கூட்டம் 14-06-2012 அன்று மாலை துணைத் தலைவா் சகோ. இஸ்மாயில் இல்லத்தில் தலைவா் A.தமீம் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட தீா்மானங்கள் (குறிப்பாக அதிரை அனைத்து முஹல்லா தாயக தலைவா் மற்றும் அதிரை பேரூராட்சி தலைவா் இடையிலான விசயங்களை இணக்கமன முறையில் தீா்ப்பது) அடங்கிய கடிதம் தாயகத்தில் உள்ள AAMF க்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் 13-07-2012 அன்று நெசவு தெருவில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Saturday, June 9, 2012

Thursday, June 7, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் !



இன்று ( 08-06-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF'ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் A. அப்துல் முனாப், சமூக ஆர்வலர் சகோ.K.S. அப்துல் ரஹ்மான் ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக......
1.       கிராஅத் :A. முஹம்மது இப்ராகிம் ஆலிம்
2.       வரவேற்புரை : பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர்

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக.........
3.       சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எழுதிய "விழிப்புணர்வு பக்கங்கள்" என்ற புத்தகம் வெளியீடப்பட்டது.

4.       "அதிரை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் சார்பாக நமதூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் நமதூரைச் சேர்ந்த சிறந்த கல்வி நிலையங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

5.       அதிரையில் உள்ள ஒன்பது முஹல்லாக்களில் ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் அருகிலுள்ள ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம் போன்றவை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ளவற்றைச் சார்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது. அரசால் பெறப்படுகிற நலத்திட்டங்கள் பலவும் இப்பகுதிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் வாழும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A.லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிரை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு இலகுவாக அதிரை பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் மாவட்ட கலக்டர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று அனைத்து முஹல்லாவின் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6.       AAMF பைலாவின் இறுதிவடிவம் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துகள் / ஆலோசனைகள் எதிர்பார்க்கப்பட்டன.

7.       லண்டன் வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரத்தை ஏழை மாணவ மாணவியரின் சீருடைக்காக பயன்படுத்த வேண்டி அதிரை பைத்துல்மால் தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

8.      துபை வாழ் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஒருசில உறுப்பினா்களால் வசூல் செய்யப்பட்ட கலிஃபா உமர் (ரலி) மஸ்ஜீத் ( சுரைக்கா கொல்லை ) கட்டிட நிதியாக ரூபாய் ஐம்பது ஆயிரம் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
9.       சிறப்பு விருந்தினர்களாக காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், பெரிய ஜும்மாப் பள்ளி நிர்வாகிகள் சகோ. V.M. அப்துல் மஜீத், சகோ. K.S.M. பகுருதீன்,கீழத்தெரு ஜமாத் தலைவர் சகோ. தாஜுதீன், தரகர் தெரு ஜமாத் நிர்வாகி சகோ. அஹமது ஹாஜா, "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ், "கவிஞர்" சபீர், அதிரை நிருபர் – நெறியாளர்,சகோ. நெய்னா தம்பி, அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகி சகோ. ஜஃபருல்லா, ஆகியோர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

10.   நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "நெசவுத்தெரு முஹல்லாவில்" வருகின்ற 13-07-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Friday, May 11, 2012

அமீராக AAMF-யின் செயற்குழு கூட்டம்


நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:


1)  1)கீழத்தெரு முஹல்லாவாசிகள் கொடுத்த கடிதத்திற்கு AAMF–ன் சார்பாக விளக்கமளிக்ப்பட்டது.
2)   2)AMF–ன் அமைப்பு நிர்ணயச் சட்டம் அனைவருக்கு படித்துக் காட்டப்பட்டு, இறுதி செய்யப்பட்டது. இதன் நகல் தாயக AAMF-ற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
3)   3)அமீரகத்தில் AAMF-ல் உள்ள பலவீனமான முஹல்லாக்களை நோ்முகமாக சந்தித்து ஆா்வப்படுத்துவது என தீா்மானக்கப்பட்டது.


     4)   வருகிற ஜீன் மாத செயற்குழு கூட்டம் 14-06-2012 அன்று இன்ஷா அல்லாஹ் துணைத் தலைவா் P.இஸ்மாயில் காக்கா இல்லாத்தில் நடைபெறும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes