Friday, October 26, 2012
துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012
அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை
முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.
காலை 6:50 மணிக்கு பெருநாள் தொழுகை
தொடங்கியது. சரியாக 7:30 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக்
கூடத்தொடங்கினர்.
சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப
புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது,
மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அதிரைவாசிகள் 350 பேருக்கும்
அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
அதிரைவாசிகளுக்கு இத்தகைய
சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த
அதிரைவாசிகளுக்கு “AAMF” சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
Wednesday, October 24, 2012
AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள்
சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா
ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.
உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.
அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ் பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.
குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Mr. Ismail 055-6077680 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி
மஹல்லா
Mr. Ajmal 050-4963848 தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா
Mr. Meeramohindeen 055-2320145 அல் மதரஸத்துன் நுருல்
மஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Mohideen 050-5785239 மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina 050-7397093 முகைதீன் ஜீம்மா பள்ளி
மஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114 மிஷ்கீன் சாஹிப் பள்ளி
மஹல்லா
Mr. Abdul Jabbar 055-8219432 சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா
அன்புடன்,
அனைத்து மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத் பெருநாள் சந்திப்பு குழு
UAE
அனைத்து மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத் பெருநாள் சந்திப்பு குழு
UAE
Saturday, October 20, 2012
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டம் !
இன்று ( 19-10-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் மஹல்லாவில் உள்ள ரஹ்மான் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டத்திற்கு AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் சகோ. அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.
1. கிராஅத் : சேக்தாவுது ஆலிம் அவர்கள்
2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப் M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.
3. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் 'கூட்டத்தின் ஒழுங்கீனம்பற்றி' குறிப்பிட்டு பேசினார்கள்.
4. சகோ. வாப்பு மரைக்காயர் அவர்கள் தனது அறிமுக உரையில் 'M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் உருவாகிய வரலாறு பற்றி குறிப்பிட்டு பேசினார்கள்.
5. நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக [ மவுத் ] குழி வெட்டுதலில் ஈடுபடும் சகோதரர்களுக்கு காலதாமதமில்லாமல் அவர்களுடைய ஊதியம் அவர்களுக்கு சென்றடையும் வகையில் கையிருப்பு தொகை இருப்பதின் அவசியம் எடுத்துப்பேசப்பட்டன. இதற்குரிய உதவிகளுக்கு முயற்சிக்கும்படி அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் தனது வேண்டுகோளாக வைத்தார் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள்.
6. முதன் முதலாக AAMF'ன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதம் நகர் மஹல்லாவாசியான மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களை வரவேற்று அனைவரிடத்திலும் அறிமுகம் செய்துவைத்து அவர்களின் சமூகம் சார்ந்த எழுத்துப்பணிகள் பற்றி குறிப்பிட்டு பேசினார் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள்.
7. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் போன்றவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குவதற்காக குழு ஓன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், சேக்கனா M. நிஜாம் மற்றும் மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரை நியமணம் செய்யப்பட்டுள்ளது.
8. AAMF'ன் பைலா அடுத்தக் கூட்டத்தில் இறுதிவடிவம் செய்யப்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
9. அனைத்து மஹல்லாவின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு திருமண பதிவேடு புத்தகத்தை அந்ததந்த மஹல்லாவிற்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
10. முஹல்லா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'மஹல்லா' என்ற சரியான வார்த்தையை அனைத்து தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டன.
11. இதய சிகிச்சைக்காக சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு சகோ. இம்தியாஸ் மூலம் பெறப்பட்ட ரூபாய் 17,300/- AAMF'ன் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு, அவர் விரைவில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப இறைவனிடம் 'துஆ'ச்செய்ய அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
12. அரசின் சார்பாக ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக நம்மைப்பற்றிய உடற்கூறு ரீதி ஆதாரங்கள் [ புகைப்படம், அங்க அடையாளங்கள் போன்றவை ] எடுக்கும் பணிகள் நமதூரில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குரிய ஆவணங்களை அலுவலரிடம் சமர்பித்து தவறாது எடுத்துக்கொள்ளும்படி அனைவரிடமும் வேண்டுகோள் விடப்பட்டன.
13. AAMF'ன் எட்டாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சகோதரர்கள் இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது ஆகியோர் முதல் முறையாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "புதுத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
Friday, October 12, 2012
அமீரக AAMF-ன் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம்: தாஹா நெசவு தெரு முஹல்லா, சார்ஜா
தேதி: 11-10-2012
அமீரக AAMF-யின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் தலைவர் A. தமீம்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்வமர்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...
1. AAMF - யின் 2013 ஆண்டு காலண்டர் வினியோகிப்பது சம்மந்தமாக ஸ்பான்ஸ்சர்களை
அணுகி காலண்டர்காண பொருளாதாரத்தை ஈட்டுவது, அது முடியாத பட்சத்தில் அனைத்து முஹல்லாக்களின்
பங்களிப்புடன் தொகையை வசூழித்து அச்சிட்டு வினியோகிப்பது.
2. தரகர் தெரு முஹல்லா ஜாமாத்தை ஒருகிணைப்பது.
இப்படிக்கு,
AAMF-UAE
Sunday, September 9, 2012
அதிரை காவல்துறையின் அழைப்பை ஏற்று அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !
இன்று இரவு 8 மணியளவில் நமதூர் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.
1. அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் அழைப்பை ஏற்று நமதூர் அனைத்து முஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2. வருகின்ற 22-09-2012 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் மூர்த்தி’ ஊர்வலத்திற்கு எவ்வித அசாம்பவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் தங்களுடைய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.
1. அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் அழைப்பை ஏற்று நமதூர் அனைத்து முஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2. வருகின்ற 22-09-2012 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் மூர்த்தி’ ஊர்வலத்திற்கு எவ்வித அசாம்பவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் தங்களுடைய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.
Saturday, September 8, 2012
அமீரக AAMF-ன் செப்டம்பா் மாத செயற்குழு கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அமீரக AAMF-ன் செப்டம்பா் மாத செயற்குழு கூட்டம் தலைவா் A. தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
இடம் : மீரா மைதீன் ரூம் (கீழத் தெரு)
தேதி: 06.09.2012
இவ்வமா்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீா்மானங்கள் :
1) கடந்த ரமளான் மாதத்தில் அமீரக AAMF-ன் சார்பாக வாழைமரத்து பள்ளிவாசலில் (துபை) நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக செய்து முடிக்க உதவிய சகோதா்கள்; மக்தும் நைணா, தஸ்தகீா் மற்றும் ஷேக்தாவுத் ஆகியோருக்கு அமீராக AAMF-ன் சார்பாக நன்றியை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
2) தாயக AAMF-ன் சார்பாக கடந்த 31.08.2012 அன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் ஊரில் நடைபெறும் கட்டிட கட்டுமானம் பணிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்டு முடிவெடுத்தை அமீராக AAMF-ன் வரவேற்கிறது. இதனை போர்கால அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வர துரிதமாக செயல்பட UAE – AAMF கேட்டுக் கொள்கிறது.
3) மறியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது, இது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட நிகழ்வாக இருப்பதால், அந்த முகல்லாஹ்வின் முடிவுக்கு விட்டுவிடுவது என தீர்மானிக்கப்பட்டது.



Adirai All Muhallah Forum

























