
Adirai All Muhallah Forum
1 comment

கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பட்டிணத்திற்கு சற்றே முன்பாக, அதிரையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வெளிவயல் கடற்கரை நமதூர் மக்களின் கோடைகேற்ற குளு குளு (Budget Beach) பீச்சாக உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் என நினைவுகூறத்தக்க வகையில் அதிரை (செம்படவர் தெரு)கடற்கரை, மனோரா, ராஜாமடம் பாலம், மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம், (ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் அழகு என சுனாமியால் அழகான) கீழத்தோட்டம் கடற்கரை மணல் என இளைப்பாரி வந்த நமதூர் மக்கள் தற்போது மாலைவேளைகளில், குறிப்பாக பெருநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவயல் கடற்கரையில் வண்டி வண்டியாய் வாகனங்களில் வந்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர்.
பாசி படர்ந்த, ஓரளவு கழிமண் கலந்த அழுக்கு கடல் தான் என்றாலும் ஆர்ப்பரிக்கும் அலைகளும், சில்லென்ற காற்றும், பரந்த மணற்பரப்பும், கடற்கரையினுள்...