
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக மூன்றாவது கூட்டமாக இன்று (10-02-2012 ) அஸர் தொழுகைப்பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர் M.A.முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.AAMF ’ன் முதல் கூட்டமாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் AAMF ன் வளர்ச்சிகள் மற்றும் ஹஜ்ரத் பிலால் நகர் மற்றும் ஆதம் நகர் ( M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன்...