
Adirai All Muhallah Forum
No comments
"இந்தியாவில், அதிகமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம். மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்" என, மாநில தகவல் உரிமை ஆணையர் பெருமாள்சாமி பேசினார்.ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், "தகவல் அறியும் உரிமை சட்டம்-2005&' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் பெருமாள்சாமி பங்கேற்று பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள், மக்கள் வரிப்பணத்தில் இயங்குகிறது. இப்பணம் முறையாக பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுகிறது.தகவல் அறியும் உரிமை சட்டமானது, 1776ல் சுவீடன் நாட்டில் அறிமுகப்படுத்தபட்டது. இச்சட்டத்தை, காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1997ல் அறிமுகபடுத்தப்பட்ட இச்சட்டம்,...