
தற்காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கும் வட்டி அடிப்படையிலான வங்கிகள் (Commercial Banks) அவற்றின் ‘சேவைகளால்’ பிரபலமடைந்திருப்பது நிதரிசனமாகும். அவற்றுக்கு எதிராக நமதூரில் வட்டியின் வாடையே இல்லாத – வட்டியின் நிழலே படியாத – இஸ்லாமிய வங்கிச் சேவையின் முதல் அத்தியாயம், ‘கர்ழன் ஹஸனா’ – அழகிய கடன் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை இதன் மூலம் அறியத் தருகின்றோம்.
ஊரின் எல்லா ஜுமுஆப் பள்ளிகளிலும் நோட்டீஸ் மூலம் அறிவிப்புச் செய்து, இம்மாதம் முதல் இச்சேவை தொடங்கியுள்ளது. முதலில், வட்டியின் மூலம் பெரிதும் பாதிப்படையும் சிறுதொழில் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள், குடிசைத் தொழில் செய்பவர்கள் போன்றவர்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சிறு தொகையைக் கடனாக வழங்கி, முதலில் வட்டிக் கொடுமையிலிருந்து அவர்களை...