
Adirai All Muhallah Forum
5 comments

ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.
இப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.குறிப்பாக,...