Saturday, January 28, 2012

அதிராம்பட்டினம் பேரூராட்சி பொது மக்களுக்கு ஒர் அறிவிப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தங்களால் செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி, உரிமக்கட்டணம் மற்றும் குடி நீர் கட்டணங்களை 31 -03 -2012 க்குள் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரதி வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் பேரூராட்சி வசூல் பணியாளர்கள் தங்கள் கீழ் கண்ட ஜும்மா பள்ளி வாசல்களுக்கு அருகாமையில் வருகை தர உள்ளனர். இப்பேரூராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  1) கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல்  2) தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசல்  3) பெரிய ஜும்மா பள்ளிவாசல்   4) முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்-ஆலடித்தெரு  5) ஈ.சி.ஆர்.தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசல்  இப்படிக்கு செயலர் அலுவலர், அதிராம்பட்டினம் பேரூராட்சி நன்றிஅதிரை....

Wednesday, January 25, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – பொது அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ! அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012  )  அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில், நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான்...

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes