பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
ஒரு சிறிய இடைவேலைக்கு பிறகு தங்களை பின் தொடரும் தகவல் தெரிவிக்கும் வகையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த 30.09.2011 அன்று கிஸஸ் கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற அமீரக AAMF-ன் முதல் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்ஷாஅல்லாஹ் உயிரூடும் வகையில் வரக்கூடிய ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை பயன்படுத்துவது என அமீரக நிர்வாகிகள் தீர்மானித்தோம். மாஷாஅல்லாஹ்! அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை தாயத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி அமீரக AAMF-ன் நிர்வாகிகளான – தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள்...