Wednesday, November 2, 2011

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011

அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)  

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

    اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேல்த் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளை AAMF(துபை) ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துல்லாஹ்!

இதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும், நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும், நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் என AAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMF முடிவு செய்துள்ளது.

இவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்!

குறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.

அன்புடன்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
துபை –  ஐக்கிய அரபு அமீரகம்.


Monday, October 31, 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய வேண்டுகோள்


*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் குறித்து தமிழ்நாடு தோ்தல் ஆனணயம் அறிவித்துள்ளதை அதிரைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவார் A. தமீம் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.!*

**
அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்குகிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு*
சென்னையில்:சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்:கடந்த பொதுத் தேர்தலின்போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர்.
பெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி
முதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம் என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க  8ம் தேதிக்கு பிறகு பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*என்ன படிவம் தேவை?*
வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம் எண் 6,
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு
சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இதை கவனத்தில் கொண்டு தாயகத்தில் இருக்கும் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்கள்,திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் உடனடியாக இதை செய்யத் தூண்டும் விதமாக அமீரகம் முழுவதிலும் இருக்கும் நமதூா் மக்களின் கவனத்திற்கும் இந்த தகவலை எத்தி வைக்கும் பணியை நமது அமீரக அனைத்து முஹல்லா கூட்டமைப்புயின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
*A. தமீம்*
தலைவர்,
அமீரக அனைத்து முஹல்லா கூட்டமைப்பு.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes