
2013-ம் ஆண்டு - நோன்பு பெருநாள் சந்திப்பு துளிகள்…
அல்லாஹ்வின் பேரருளால் 08-08-2013 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.
காலை 06:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 6:40 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.
சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
அதிரை தவிர்த்து கீழக்கரை, காயல்பட்டினம், லெப்பைக் குடிக்காடு மற்றும் ஓரிரு ஊரைச்சார்ந்தவர்களும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அதிரைவாசிகள் 300 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அதிகாலை...