பிலால் நகர் - நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேரில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என குடிசைகளில் வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் சமிபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து ஆங்காங்கே வெள்ளக்காடு போல் காட்சியளித்தன. இதையடுத்து பாதிப்புக்குள்ளான வெள்ளப்பகுதிகளை படம்பிடித்து காணொளி வடிவில் நமதூர் வலைதளங்களில் பதிவு செய்து வெளியிடப்பட்டன.
சமூக ஆர்வலரும், AAMF – இலண்டன் கிளையின் ஒருங்கிணைப்பாளருமாகிய சகோ. இம்தியாஸ் அவர்களின் முயற்சியால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு - இலண்டன் கிளை சார்பாக ரூபாய் 25,725/- வசூல் செய்து அனுப்பி வைத்தனர். இப்பணத்தை பாதிக்கப்பட்ட...