
ஈமான்(IMAN) அமைப்பின் வேண்டுகோளின்படி- AAMF (துபாய்) மேற்பார்வையில் நோன்பு கஞ்சி வினியோகம்
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பிற்கினிய அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கும் அவர்தம்உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சங்கைமிகு ரமலான் மாதத்தின்அருட்கொடைகளை வல்லோன் அல்லாஹ் அருளட்டுமாக.ஆமீன்.
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த இருவருடங்களுக்கு முன்புஅமீரகத்திலும், அதிரையிலும் சிலபல திட்டங்களுடன் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம், மேலும் அமைப்பின் நோக்கத்தையும் இலக்கையும் நம் அனைவரின்தொடர்ச்சியான கூட்டுசெயல்பாடுகளால் விரைவில் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான வழிவகைகளை நமக்கு இலகுவாக்கி வைப்பானாக, ஆமீன்.
முஸ்லிம்கள் நிறைந்துள்ள தமிழக ஊர்களில் நமதூர் அதிராம்பட்டினம் குறித்தநல்லெண்ணம் பலரிடமும் உள்ளதை அறிந்திருப்பீர்கள். அவ்வகையில், ஐக்கியஅரபு அமீரகத்திலுள்ள ஈமான்(IMAN) அமைப்பு, ஒவ்வொரு வருடமும் இப்தார்நோன்பு கஞ்சி மற்றும் பதார்த்தங்களை நோன்பாளிகளுக்கு துபையிலுள்ளபள்ளிகளில் விநியோகித்து வருகிறது.
அதன்படி, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF)...